உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 1

பாகம் 1 2 3 4 5

உங்களுக்கு கணினியை தாக்கும் *வைரஸ்* பற்றி தெரியுமா?

‘இதோடா வந்துட்டான்…. வைரஸ் பத்தி சொல்றதுக்கு. கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிச்சதிலிருந்து நான் பார்க்காதா வைரஸா. நான் உபயோகிக்காத anti-virusஆ’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

சரி சரி…. வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். நான் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்காத ஸ்பைவேர் (spyware), அட்வேர் (adware), ட்ரோஜன் ஹோர்ஸ் (trojan horse) அப்புறம் ப்ரௌஸர் ஹைஜேக் (browser hijack) போன்ற மால்வேர் (malware) வகையைச் சேர்ந்த பிற மென்பொருட்களை பத்தி தான் சொல்லவிருக்கிறேன்.

யாரோ “இதெல்லாம் என்ன ஸாஃப்ட்வேர்? எங்கே டௌன்லோட் செய்யலாம்?” என்று கேட்ட மாதிரி சத்தம் கேட்டது. என்னது? யாருமில்லையா? நல்ல வேளை. 🙂

தயவது செய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். இன்றைய தேதிக்கு வைரஸ் எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதே அளவுக்கான பிரச்சனைகளை நான் மேலே குறிப்பிட்ட இந்த (கெட்ட)வகை மென்பொருள்களும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வகை மென்பொருள் பற்றி இது வரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள்.
Continue reading “உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 1”

விண்டோஸ் அப்டேட் – II

< << முதல் பாகம் >>>

சென்ற பதிவில் விண்டேஸ் அப்டேட் செய்வதன் அவசியத்தையும் செய்முறையையும் பார்த்தோம். இன்று இந்த விண்டோஸ் அப்டேட் செயவதை தானியங்கி முறை படி இயங்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “விண்டோஸ் அப்டேட் – II”

விண்டோஸ் அப்டேட்

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உப்யோகிப்பவரா நீங்கள். இந்த மாசம் உங்கள் விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டத்தில் பேட்சஸ் எல்லாம் அப்டேட் செய்துவிட்டீர்களா. கடந்த சில மாதங்களாக மைக்ரோசாஃப்ட் மாதத்திற்கு ஒரு முறை patch release செய்து செய்த்ய் வருகிறது (முன்பெல்லாம் அநேகமாக தினமும் ஏதாவதொரு பேட்ச் வெளிவரும்).

win_logo

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று இந்த பேட்ச்கள் வெளிவருகின்றன. இந்த மாசம் இது வரை நீங்கள் உங்கள் கணினியை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்களேன்.

பொதுவாக உங்கள் கம்புயூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த "விண்டோஸ் அப்டேட்" செய்து புதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் கம்புயூட்டரை தாக்கும் வைரஸ் மற்றும் வேறு சில/பல வகையான தாக்குதல்களில் இருந்தும் உங்களையும் உங்கள் கம்புயூட்டரையும் காப்பாற்றிக்கொள்ள உதவும்.

சரி. இந்த விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா. யாரும் தயவது செய்து இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் விளக்கம் குடுத்து உங்கள் நேரத்தின் மதிப்பையோ, அல்லது உங்கள் பொது அறிவையோ நான் குறைவாக மதிப்பிட்டதாக நினத்திவிட வேண்டாம். நான் தினசரி சந்திக்கும் நன்பர்களில் பலரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்தவில்லை. அல்லது பெரும்பாலோனருக்கு இந்த சின்ன விடயங்கள் கூட தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த விளக்கம். அப்புறம் இன்னொரு முறை யாரும் Saser மாதிரி வைரஸினால் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள். Geeks மற்றும் கணினி வல்லுனர்கள் தயவு செயது மன்னித்துக்கொண்டு Slashdotடுக்கு செல்லலாம்.

Continue reading “விண்டோஸ் அப்டேட்”

கூகிளில் யுனிகோடுடன் தேடல்

மகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.

இவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.

ஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் "வலைப்பூ" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. "காசி தமிழ்" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.

வாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.

முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்

இத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.

முரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.

சகிப்பு vs கோபம்

நம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் "இவனக்கு எங்கே தெரிய போகிறது" என்று நினைத்தோ அல்லது "இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன?

எந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.

ஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

விஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.

பின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.

பின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .