தொடர் ஓட்டம் :: Book Meme

வெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய்! இது உமக்கே நியாயமா படுதா…வே? என்னவோ நல்லாயிருவே… நல்லாயிரு.

எனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக்கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.

Continue reading “தொடர் ஓட்டம் :: Book Meme”

இந்த நாள்

வேலைப்பளு குறைவாக இருக்கும் சில நாட்களில் என்ன செய்றதுன்னு தெரியாம தலைமுடியை பிய்க்கத் தோனும். வேறு சில நாட்கள் மதிய உணவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் கழியும். இன்று அப்படி ஒரு நாள்.

Continue reading “இந்த நாள்”

வந்ததும் வராததுமாய்

13 January – 09:00 மணி

Heathrowஇல் இருந்து cricklewood போவதற்கு டாக்ஸி ட்ரைவர் ஏன் இப்படி சந்து பொந்தெல்லாம் சுத்துகிறான்? North circular road வழியாக போனால் விரைவாக போயிருக்கலாமே.?

ஏழு மணி நேரம் தோஹாவில் ட்ரான்ஸிட்டில் இரவை கழித்த களைப்பில் தூக்கம் வருகிறது. சிறிது நேரம் கண்ணை மூடுகிறேன்.

“நண்பா Cricklewood வந்துவிட்டோம். நீ எங்கே இறங்க வேண்டும்.”

விழித்துப் பார்க்கிறேன். வீட்டின் அருகே வந்து விட்டது புலனாகியது. இதோ Natwest Bank.

“வலது பக்கம் திரும்புப்பா. ” சொல்லிவிட்டு முழிக்கிறேன். வீட்டிற்கு இடது புறமல்லவா திரும்ப வேண்டும்.
Continue reading “வந்ததும் வராததுமாய்”

ஹைய்யா… (ஐயோ!)

ஊருக்கு

இன்னும் 48 மணி நேரம் தான் இருக்கு. ஊருக்கு போறதுக்கு பொட்டி கட்ட ஆரம்பிச்சாச்சு.” ஒரு மாதம் விடுப்பு (!).

ஒரு வருசமா நிம்மதியா இருந்த எனது வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் இனி ஒரு மாதம் போதாத காலம்.

ஐயோ பாவம் (?).

சிவராத்திரி

அப்பாவுக்கு நாளை உத்தியோகத்தில் இருந்து ரிடையர்மென்ட். நேத்து "30 வயது ஆயிடுச்சே பொறுப்பு அதிகமான மாதிரி ஒரு பயம் வர்தா"ன்னு சாகரன் கேட்ட போது வராத பயம் இன்னைக்கு லேசா எட்டி பார்க்கிற மாதிரி இருக்கு.

Continue reading “சிவராத்திரி”

இராட்சஸ ஜந்து

மார்பில் ஏதோ ஊர்வது போல ஒரு உணர்வு. தூக்கத்தில் இருந்தாலும் தன்னிச்சையாக கை அதனை தட்டிவிடுகிறது. அடுத்த நொடி உயிர் போகிற மாதிரி ஒரு வலி. உடனே விழிப்பு வருகிறது.
Continue reading “இராட்சஸ ஜந்து”

எஸ்கேப்…

நானும் ரெண்டு வருஷமா டிமிக்கி கொடுத்திட்டு வர்ரேன். இன்னைக்கு எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டேன்.

ஊரிலே இருந்து அம்மா ஃபோன். ஃபோன் அடிக்கும் போதே பட்சி சொல்லுச்சு ஆஃபிஸ் நேரத்திலே ஃபோன் வந்துச்சுன்னா ஏதாவது வில்லங்கமா தான் இருக்குமுன்னு.
Continue reading “எஸ்கேப்…”