எரிதங்களின் அகோரத்தாக்குதல் பற்றி சில நாட்களுக்கு முன்பு காசி தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அது தொடர்பாக சில சிந்தனைகள்.
மின்னஞ்சல்களில் எரிதங்களை அனுப்புவதை விட இன்றைய தேதிக்கு வலைப்பதிவுகளில் எரிதங்களை நுழைப்பது அதிக பயன் தருவதால் இன்னும் சில நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும்.
பலரும் இதில் ஈடுபட காரணம் பேஜ் ரேங்க் (PageRank) தான். கடந்த வாரம் Google, Yahoo, MSN (புதிய தேடல் இயந்திரத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது) அனைத்தும் இணைந்து இதனை தடுப்பதற்காக தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றம் செய்திருக்கின்றன. rel=”nofollow” என்று ஒரு attribute சேர்ப்பதன் மூலம் இதனை தடுத்த நிறுத்த கூகிள் முடிவு செய்திருப்பதாக கூகிளின் வலைப்பதிவில் செய்தி வந்திருந்தது.
Read All »
Posted by நவன் பகவதி on January 25th, 2005 :: Filed under
வலைப்பதிவர்
இந்த வலைப்பதிவில் Gravatar சொருகு நிரலை நிறுவியுள்ளேன். Gravatar கணக்கு உள்ளவர்கள் மறுமொழி அளிக்கும் போது இனி அவர்கள் எடுக்கும் அவதாரமும் படமாய் தெரியும்.
மேலதிக விபரங்களுக்கு பார்க்க: Gravatar website @ http://gravatar.com/
கீழே உள்ள மறுமொழியில் தெரிவது என்னுடைய Gravatar. (என்ன கண்றாவி படம்டா இதுன்னு நீங்க சொல்றது கேட்குது. அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க.)
Posted by நவன் பகவதி on January 18th, 2005 :: Filed under
பொது,
வலைப்பதிவர்
கூகிள் சமீபத்தில் கையகப்படுத்திய பிகாஸா(Picasa) வின் புதிய வெளியீடு இன்று வெளிவந்துள்ளது.
பிகாஸா பற்றி அறிந்திராதவர்களுக்கு: கணினியில் படங்களை ஒருங்கு படுத்தி சேமிப்பதற்கும், படங்களை எடிட் செய்வதற்கும், படங்களின் தரத்தை கூட்டுவதற்குமான ஒரு மென்பொருள் இது.
மேலும் புகைப்படங்களை எடிட் செய்யவும், படங்களை குறுந்தகடுகளில் பதிவு செய்யவும் முடியும். பிகாஸா கொண்டு உருவாக்கிய ஒரு கொலாஜ் இங்கே
பிகாஸா மூலமாக உங்கள் வலைப்பதிவுகளுக்கு படங்களை அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Posted by நவன் பகவதி on January 18th, 2005 :: Filed under
கணினி,
வலைப்பதிவர்
மைக்ரோஸாஃப்டும் கோதாவில் இறங்கி விட்டது.
சில நாட்களாக ஜப்பானில் மட்டும் கிடைத்து வந்த MSN Spaces என்னும் மைக்ரோஸாஃப்டின் ‘வலைப்பதிவு சேவை’ இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது.
Read All »
Posted by நவன் பகவதி on December 2nd, 2004 :: Filed under
வலைப்பதிவர்
WordPress கொண்டு வலைப்பதிவு துவங்கவோ அல்லது WordPressக்கு உங்கள் வலைப்பதிவை மாற்றவோ நினைத்தால்… கீழ்கண்ட தளங்கள் இலவசமாக WordPress கொண்டு உங்கள் வலைப்பதிவை இயக்கத் தயார் என்கிறார்கள்.
http://www.blogsome.com/
http://www.wordpressblogs.com/
ஆவல் இருப்பவர்கள் சோதித்துப் பார்க்கலாம். (இதனை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். எனது பரிந்துரை அல்ல. பின்னாளில் அவர்கள் சேவை திடீரென்று நின்று போனால் நான் பொறுப்பல்ல)
Posted by நவன் பகவதி on November 26th, 2004 :: Filed under
வலைப்பதிவர்
Troll என்ற சொல்லுக்கு விக்கிப்பீடியா அளிக்கும் விளக்கம்:
1. A person who makes posts (on newsgroups or other forums) that are solely intended to provoke responses from others, or to cause annoyance or offense.
2. A post that is intended to incite controversy or cause offense. (Many posts may inadvertently cause strife as collateral damage, but they are not trolls.)
ஆங்கில குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் இது போன்ற மறுமொழிகள் வருவது சகஜம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சில சமயம் இது போன்றவர்களையும் அவர்களது மறுமொழிகளையும் “கோமாளிகளின் சேஷ்டைகளாக” எடுத்துக் கொள்வதுண்டு. சிலர் நகைச்சுவையாக மறுமொழி அளிப்பதும் உண்டு.
Read All »
Posted by நவன் பகவதி on November 22nd, 2004 :: Filed under
பொது,
வலைப்பதிவர்
சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்களுக்காக சைக்கோ ஜோசியம் மாதிரி ஒரு கணிப்பு நடத்தியிருந்தேன். பலரும் முடிவுகள் ‘குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.
சிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம்.
நான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது இந்த சோதனையின் முடிவுகள்:
- குருஜியாக தேர்வானோர் : 23 பேர்
- கவன ஈர்ப்பு வலைப்பதிவராக தேர்வானோர்: 12 பேர்
- சுட்டி வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்
- நறுக் வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்
- சமூக பதிவராக தேர்வானோர்: 3 பேர்
Read All »
Posted by நவன் பகவதி on November 17th, 2004 :: Filed under
பொது,
வலைப்பதிவர்
கிட்டத்தட்ட ஆறு மாதமாக கட்டி மேய்த்து வந்த Nucleus/Blog:CMS க்கு குட் பை சொல்லி விட்டேன்.
சில/பல தொழில் நுட்ப காரணங்களாலும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் எனது தமிழ் வலைப்பதிவையும் WordPressக்கு மாற்றியிருக்கிறேன். பதிவுகளை நியூக்கிளியஸில் இருந்து WordPressக்கு கடத்தி வந்ததில் இன்னமும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வதாக உத்தேசம்.
புதிய தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.
நவன் பகவதி
Posted by நவன் பகவதி on November 15th, 2004 :: Filed under
பொது,
வலைப்பதிவர்

அப்படியே தள அறிவிப்புகளுக்கும் ஒரு ஓடை இருந்தா நல்லாயிருக்குமே.
Posted by நவன் பகவதி on November 13th, 2004 :: Filed under
பொது,
வலைப்பதிவர்
வலைப்பதிவர்களுக்கு ஏழு கேள்விகள்!!!. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.
சோதனைக்கு நீங்கள் தயாரா?
Read All »
Posted by நவன் பகவதி on November 9th, 2004 :: Filed under
பொது,
வலைப்பதிவர்