தலை பத்து வார்த்தைகள்

Merriam-Webster இணைய தளத்தில் இந்த வருடம் தேடப்பட்ட தலை பத்து வார்த்தைகள். Merriam-Webster’s Words of the Year 2004

1. blog
2. incumbent
3. electoral
4. insurgent
5. hurricane
6. cicada
7. peloton
8. partisan
9. sovereignty
10. defenestration

2005ல் வெளிவரவிருக்கும் ‘Merriam-Webster Collegiate Dictionary, 11ஆம் பதிப்பில்’ முதன் முறையாக ‘blog‘ என்ற வார்த்தையும் நுழையவிருக்கிறது. (மூலம்: சி.என்.என். )

Blog noun [short for Weblog] (1999) : a Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by the writer

சென்ற வருட தலை பத்து வார்த்தைகளில் முதல் வார்த்தை ‘democracy’.

Bhutan – World’s largest book

‘இது வரை பிரசுரமானதிலேயே பெரிய புத்தகம் இது தான்’ என்ற சாதனையை படைத்திருக்கும் புத்தகம் – ‘Bhutan’. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் இந்த புத்தகம், பூட்டான் நாட்டின் கலாசாரத்தை காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.

எம்மாம் பெரிய புக்
புத்தகத்தை காணோமேன்னு தேடாதீங்க.
சுவத்தில ஆளுசரத்துக்கு சாத்தி வைச்சிருக்கு பாருங்க.
அது தான் நான் சொன்ன புக்.

நானும் ஒரு பிரதி வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள் யாராவது வாங்கி் பரிசளிக்கும் போது நான் வாங்கி வைச்சிருக்கிற காப்பி வேஸ்டாயிடுமேன்னு விட்டுட்டுட்டேன் (ஹி.. ஹி.. விலை $10,000 தான் 🙁 ).

நன்றி: http://www.kottke.org/04/10/bhutan-book