Improved Tamil language support in Mozilla

மொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/

இன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.

This seems to work with a few minor glitches. Will write a final report after some intensive testing.

Sim Cityயும் Simputerஉம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.

Continue reading “Sim Cityயும் Simputerஉம்”

Yahoo! 360° and some important Security Tips

இப்பொழுது தான் பார்த்தேன். யாஹூ 360 உபயோகிக்க விரும்புவோர் இனியும் பிறரின் அழைப்புக்காக காத்திருக்க தேவையில்லை. சோதிக்க/உபயோகிக்க விரும்புவோருக்கான சுட்டி இதோ: Yahoo! 360° – Home

—-o0o——–o0o——–o0o——–o0o—-

Stupidity

உங்கள் வலைப்பதிவுகளை நிறுத்தி வைப்போம் என்று சிலர் குறும்பாக சொல்லி வைக்க அதனை வாசித்த பலரும் ஆடிப்போயிருப்பதாக தெரிகிறது. தன் “Hard Disk Drive”ஐ அழிச்சுத் தொலைச்ச hackerஐ பற்றி இரு மாதங்களுக்கு முன்பு படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

அதற்காக இணைய தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் இருங்கள் என்று நான் சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு பயப்படாமல் இருந்து விட்டால் அதனால் விளையும் பின் வளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாதலாததால், உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வழிமுறையும் சொல்லி விடுகிறேன்.

இந்த வழிமுறையினை பின் பற்றுவதால் இணைய தீவிரவாதிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், Ad-ware, Spyware, Virus, Identity theft போன்ற பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதற்காக உங்கள் மேலதிகாரி எனக்கு நன்றி செலுத்தவும் கூடும் – அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க போவதால்.

உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த தீயரண் (Firewall) எல்லாம் தேவைப்படாது. இணைய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு சுலபமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு உங்களுக்கு அதிகம் செலவாகாது. அதே நேரத்தில் அகலப்பாட்டை, ராஜாபாட்டை என்று நீங்கள் எந்த வகையான இணைப்பு வைத்திருந்தாலும் இது வேலை செய்யும்.

இது பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் செயல் விளக்கம் இங்கே.

பி.கு: இணையத்தில் உள்ள பிற தொழில் நுட்பங்களை போன்று இதுவும் சிலரால் தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

Can you change my Yahoo username?

புது (சக) ஊழியர்: வணக்கம் நவன். நல்லா இருக்கீங்களா?

நான்: பரவாயில்லை. நீங்க?

புசஊ: நல்லாயிருக்கேன். என் பெயரில் மின்னஞ்சல் கணக்கு திறந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. (இது அலுவலகத்தின் டொமைனில் அவருக்கு உருவாக்கிக் கொடுத்த மின்னஞ்சல் முகவரி). ஆனா அதுக்குள்ளே எப்படி போறதுன்னு தெரியலை.

Continue reading “Can you change my Yahoo username?”

Indic Developer Challenge

Microsoft Indic Developer Challenge

மைக்ரோஸாஃப்ட் இந்திய மொழிகளில் மென்பொருட்களை உருவாக்குவதற்காக கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஒரு போட்டியினை அறிவித்துள்ளது. பாஷா இந்தியா தளத்தில் இது பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்.

இந்த அறிவிப்பை பார்த்தவுடன் இது போன்ற ஒரு போட்டியினை திறமூல ஆர்வலர்கள் ஏன் நடத்தக் கூடாது என்று தோன்றியது.

– மென்பொருட்களை தமிழாக்கம் செய்வது
– புதிய மென்பொருட்களை உருவாக்குவது
– தமிழில் உதவி பக்கங்கள் எழுதுவது
– மென்பொருட்களுக்கான கையேடுகள் எழுதுவது
– கல்லூரிகளில், பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியினில் அமைந்த இணையதளம், மாணவர்களுக்கான வலைவாசல்

என்று பல தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தலாம்.

இதனை எடுத்து செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் குழுக்கள் தயாராக இருந்தால் அவர்களுக்கு என்னாலான பங்களிப்பினை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பொதுவாகவே M$ மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நமது பாடத்திட்டங்களின் நடுவே இது போன்ற போட்டிகள் மாணவர்களின் பார்வையினை பிற தொழில் நுட்பங்களின் பக்கம் திருப்ப உதவி செய்யக் கூடும். Any takers?

Say Cheese :-)

Flower from pdphoto

உங்கள் பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை இணைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறீர்களா. நிறைய பேர் (நானும் தான்) கூகிள் இமேஜஸ் உபயோகித்து படங்களை திருட்டுத் தனமாய் தத்தெடுப்பது உண்டு.

இணையத்தில் உள்ள மிகப்பெரிய (அ)சௌகரியங்களில் இதுவும் ஒன்று. வேறு இன்னொருவருக்கு சொந்தமான படத்தை உரிமையுடன் எடுத்து உபயோகித்து விட்டு ஒரு acknowledgementஉம் disclaimerஉம் போட்டால் போதும். நேர்மையாய் இருப்பது போன்ற முகமூடி தயார்.

சமீபத்தில் யாஹூ Creative Commons உரிமத்தின் படி அமைந்த ஆக்கங்களை தேடுவதற்கு தனியாக ஒரு தேடல் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை கொண்டு அடுத்தவரின் உரிமத்தை மீறாமல் “CTL+C” “CTL+V” செய்வதற்கு தேவையான ஆக்கங்களை கண்டுபிடிக்கலாம். (அங்கே போய் tamil என்ற வார்த்தை கொடுத்து தேடி பாருங்கள். இரண்டாம் இடத்தில் உங்கள் அபிமான… 🙂 )

சரி… தலைப்புக்கு வந்துடுறேன். எந்த விதமான ராயல்டி பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் படங்களை சுடுவதற்கு சில தளங்கள் இதோ.

* http://www.morguefile.com/
* http://www.pixelperfectdigital.com/
* http://www.openphoto.net/
* http://www.imageafter.com/
* http://pdphoto.org/

மேலே இருக்கிற படம் pdphoto.orgயில் இருந்து உரிமையுடன் எடுத்தது.

நரியுடன் ஓர் உலா – 2

ஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.

சென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..

கோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ரொம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

Firefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.

நரியுடன் ஓர் உலா – 1

வலைப்பதிவோரும், வாசகர்களில் சிலரும் அவ்வப்போது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் வலைத்தளங்களங்களையும், வலைப்பதிவுகளையும் பார்வையிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி குரல் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் சிலர் மொசில்லா குடும்ப உலாவிகளில் நமது தளங்களையும்/வலைப்பதிவுகளையும் தெரிய வைப்பதற்கு தேவையான மாற்றங்களை இன்னமும் செய்யாமலிருக்கிறோம். ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உபயோகிப்போரின் குரல் சிறுபான்மையினரின் குரலாக சபையில் எடுபடாமலிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சில புள்ளி விபரங்கள்

தலை பத்து உலாவிகள்

மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்போரின் சதவிகிதம் இப்போது கனிசமாக உயர்ந்திருக்கிறது என்பது சென்ற மாதத்தில் இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்தோரின் புள்ளி விபரத்தை ஆராய்ந்ததில் புரிந்தது.

Continue reading “நரியுடன் ஓர் உலா – 1”

The “Dirty Dozen”

Dirty Dozen

மின்னஞ்சல் எரிதங்கள் உதயமாகும் நாடுகளின் பட்டியலை Sophos வெளியிட்டுள்ளது. அதில் முதல் 12 இடங்களில் வரும் நாடுகள்.

1. United States – 42.11%
2. South Korea – 13.43%
3. China (incl Hong Kong) – 8.44%
4. Canada – 5.71%
5. Brazil – 3.34%
6. Japan – 2.57%
7. France – 1.37%
8. Spain – 1.18%
9. United Kingdom – 1.13%
10. Germany – 1.03%
11. Taiwan – 1.00%
12. Mexico – 0.89%
Others – 17.8%

Source: Sophos articles about spam: The “Dirty Dozen” 2004: Sophos reveals the top spamming countries

Picasa 2 launched

கூகிள் சமீபத்தில் கையகப்படுத்திய பிகாஸா(Picasa) வின் புதிய வெளியீடு இன்று வெளிவந்துள்ளது.

பிகாஸா பற்றி அறிந்திராதவர்களுக்கு: கணினியில் படங்களை ஒருங்கு படுத்தி சேமிப்பதற்கும், படங்களை எடிட் செய்வதற்கும், படங்களின் தரத்தை கூட்டுவதற்குமான ஒரு மென்பொருள் இது.

மேலும் புகைப்படங்களை எடிட் செய்யவும், படங்களை குறுந்தகடுகளில் பதிவு செய்யவும் முடியும். பிகாஸா கொண்டு உருவாக்கிய ஒரு கொலாஜ் இங்கே

பிகாஸா மூலமாக உங்கள் வலைப்பதிவுகளுக்கு படங்களை அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.