Category Archives: வலைப்பதிவர்

வலைப்பதிவர்களுக்கான சில செய்திகள்

Fighting comment abuse and spam

இதற்கு ஒரு சின்ன வேலை செய்திருக்கிறேன். This is just an idea. மற்றவர்களின் ஈடுபாட்டினை பொருத்து தான் மேற்கொண்டு தொடரலாமா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

http://navakrish.com/abuse_report/ போய் பார்த்துட்டு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.

போன பதிவிற்கு வந்திருந்த பின்னூட்டங்களை பார்க்கையில் இதனால் பாதிக்கப்பட்டவன் நான் ஒருவன் மட்டும் இல்லை என்று தெரிக்கிறது.

Time to start a IP blocklist for Tamil Blogs?

இதை என்னென்ன சொல்றது. ஒரு ‘Mr. X’ நேத்து என்னோட லினக்ஸ் பதிவுக்கு வந்து 30 நிமிசம் செலவு செய்துட்டு அப்புறம் ரொம்ப ஆக்கப்பூர்வமா யோசிச்சு மூனு கமென்ட் எழுதிட்டு போயிருக்கார்.

Continue reading

எழுதுவதற்கு ஒன்றும் இல்லாத போது…..

வலைப்பதிவின் பெயரையாவது மாற்றி வைக்கலாம்.

‘கிறுக்கல்’னு *ரொம்ப பேர்* பேர் வைக்காங்கன்னு *ரொம்ப பேர்* வருத்தப்பட்டதனால ‘எனது கிறுக்கல்கள்’ன்னு இது வரைக்கும் நான் கூப்பிட்டுட்டிருந்த என்னோட வலைப்பதிவிற்கு இன்னையிலருந்து ‘தாமிரபரணித் தென்றல்‘னு புதுப்பெயர் சூட்டிட்டேன்.

பெயர் காரணம்???

பெரிசா ஒன்னும் கிடையாது. க்ரியேட்டிவா ஏதாவது யோசிக்கலாம்னா ஒன்னும் மாட்டலை :wink:.

நிறைய பேர் சொந்த ஊர் பெருமையை பேசுறதை பார்த்திருக்கேனா… சரி நாமளும் நம்ம ஊரு பெருமையை பேசுற மாதிரி ஏதாவது பேர் வைப்போமுன்னு தான்.

கூகிளில் யுனிகோடுடன் தேடல்

மகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.

இவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.

ஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் "வலைப்பூ" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. "காசி தமிழ்" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.

வாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.

கோவிந்தா கோவிந்தா

ஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.

எனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்
எதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்
அளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்
உள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திகிறது.

அதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க
கூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா? அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா? தெரியவில்லை.

உனக்கு வேணும்டா இது

எனக்கே கேவலமா இருக்கு. வடிவேல் சொல்ற மாதிரி என்னை பார்த்து நானே "உனக்கு வேணும்டா இது. உனக்கு வேணும்" என்று புலம்பி கொண்டிருக்கிண்றேன். "ஏன்டா நல்லா தானடா இருந்தே? ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே?" என்று கண்ணாடி என்னை பார்த்து கேட்பது தெரிகிறது.

பெரிய மனிதன் மாதிரி வலையில் பதிய ஆரம்பித்து விட்டு இப்படி "வெறும் கடையை" திறந்து வைத்திருப்பதற்கு தான் கேவலமா இருக்கு. சும்மா ஒரு வேகத்தில் வலை பதிய ஆரம்பித்துவிட்டேன்.

நான் எப்பொழுதுமே இப்படி தான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசிப்பது என்ற பழக்கமே கிடையாது. எதிலாவது காலை விட்டு விட்டு திரு திருவென முழிப்பதே வாடிக்கையாகிவிட்டது. ஏதோ எல்லாரும் வலை பதிவு போடுகின்றார்களே என்று நானும் ஒன்றை ஆரம்பித்து விட்டேன். ஆனா எதை பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை.

முதலில் என்னவெல்லாமோ எழுதலாம் என்று கை பரபரத்தது. நெடுங்காலமாய் நன்பர்களோடு உட்கார்ந்து பேசிய விடயங்கள் பலவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன். சமுதாயம், உளவிவியல், அறிவியல், ஆண்மீகம், அரசியல், வாழ்க்கை என்று எழுதுவதற்கு விடயங்களா இல்லை. ஆனால் எழுதுவதற்கு தான் கை ஓட மாட்டேன் என்கிறது. குணா கமல் மாதிரி "அதை எழுதனும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டேங்குது".

ஏன் இந்த குழப்பம்? நினைத்து பார்க்கையில் இந்த குழப்பம் என் வாழ்க்கையில் அனைத்து கால கட்டத்திலும் என்னை தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

வீட்டிற்கோ, நண்பர்களுக்கோ கடிதம் கூட இது வரை எழுதியதில்லை. ஏன் personal E-Mails எழுதவது கூட எனக்குக கடினமான விடயம் தான். கடிதம் எழுத உட்கார்ந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதற்கு பதிலாக தொலைபேசி மூலமாக பேசி விடலாம் என்று பல முறை பேசியிருக்கிறேன். இவ்வளவு ஏன்? எழுதிய கடிததை தபாலில் சேர்க்காமல் கையிலேயே வைத்திருந்து பிறகு அந்த நண்பரை நேரில் சந்திக்கும் போது கையில் கொடுத்திருக்கிறன்.

சரி. இப்போது என்ன தான் செய்வதாக உத்தேசம். சத்தம் போடாம இப்படி கிறுக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்திவிடலாமா? ஆகா நல்லா இருக்கே. கிறுக்க தான் ஆரம்பித்தாகிவிட்டதே. சிறு பிள்ளை போல் கிறுக்கி தள்ளுவோம். இன்னும் சில நாட்களுக்குள் தெளிவாக இது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று தெரிந்துவிடாதா என்ன?

ஆனால் அதற்கு தினமும் ஏதாவது எழுதி பழக வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.

சித்திரமும் கை பழக்கம் தானே.