எரிதங்களின் அகோரத்தாக்குதல் பற்றி சில நாட்களுக்கு முன்பு காசி தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அது தொடர்பாக சில சிந்தனைகள்.
மின்னஞ்சல்களில் எரிதங்களை அனுப்புவதை விட இன்றைய தேதிக்கு வலைப்பதிவுகளில் எரிதங்களை நுழைப்பது அதிக பயன் தருவதால் இன்னும் சில நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும்.
பலரும் இதில் ஈடுபட காரணம் பேஜ் ரேங்க் (PageRank) தான். கடந்த வாரம் Google, Yahoo, MSN (புதிய தேடல் இயந்திரத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது) அனைத்தும் இணைந்து இதனை தடுப்பதற்காக தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றம் செய்திருக்கின்றன. rel=”nofollow” என்று ஒரு attribute சேர்ப்பதன் மூலம் இதனை தடுத்த நிறுத்த கூகிள் முடிவு செய்திருப்பதாக கூகிளின் வலைப்பதிவில் செய்தி வந்திருந்தது.