மன்னித்து விட்டோம்

முதலில் sorry சொல்லும் சில புகைப்படங்களை பார்க்கையில் ‘அட!!! வித்தியாசமாக இருக்கிறதே’ என்று தோன்றியது. அடுத்த சில நாட்களிலேயே ‘எதற்கு வருந்த வேண்டும். நாம் செய்தது நியாயமே’ என்று சிலர் கிளம்ப ‘சபாஷ் சரியான போட்டி’ன்னு சொல்ல தோன்றாவிட்டாலும், இந்த போட்டியின் போக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது.

இப்போது ‘appologies accepted‘ (மன்னித்து விட்டோம்) என்று ஒரு தளம் துவக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் இங்கே சில புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.

apologies accepted

இந்த தொடர் இயக்கம் ஒரு விதத்தில் ஒரு பார்வையாளனாக எனக்கு சுவாரசியமாக இருந்தாலும் இது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. எங்கும் இருப்பது போல் போல் இரு தரப்பிலும் கொள்கை பிடிப்புடைய சிலர் இருக்கவே செய்வார்கள்.

ஆனால் இதுக்கு பின்னாடி வியாபார எண்ணங்கள் யாரும் இருக்கிறது என்று ஒரு சின்ன சந்தேகம்.

sorryeverybody.com டி-சர்ட்களை பார்க்கையில் இந்த சந்தேகம் கொஞ்சம் வலுக்கவே செய்கிறது.

அடுத்து என்ன? sorry சொல்லும் Coffe mugs, pens, paper weights, வாழ்த்து அட்டைகள் என்று வரிசையாக வந்தாலும் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *