Time to start a IP blocklist for Tamil Blogs?

இதை என்னென்ன சொல்றது. ஒரு ‘Mr. X’ நேத்து என்னோட லினக்ஸ் பதிவுக்கு வந்து 30 நிமிசம் செலவு செய்துட்டு அப்புறம் ரொம்ப ஆக்கப்பூர்வமா யோசிச்சு மூனு கமென்ட் எழுதிட்டு போயிருக்கார்.

வேறு முக்கிய வேலை இல்லையென்றால் ‘Mr. X’இன் மறுமொழிகளை பார்வையிடலாம் – http://linux.navakrish.com/content/view/21/



அய்யா Mr. X,

உங்களாலே நானும் ஒரு அரை மணி நேரம் இன்றைக்கு வேஸ்ட் செய்ய வேண்டியதா போச்சு. இவரா இருக்குமோ? அவரா இருக்குமோ?ன்னு கொஞ்சம் நேரம் ‘C.I.D சங்கர்’ வேலை பாத்துட்டு, கடைசியா எடுத்திருக்கும் முடிவு:

  • C.I.D வேலையையெல்லாம் தேவையற்ற வேலை.
  • இது போன்று சரித்திர புருஷர்கள் சொல்லும் வார்த்தைகளை எல்லாம், அழித்துவிடாமல் பாதுகாப்பில் மறைத்து வைப்பது (unpublish – not delete)
  • மறுமொழி வந்த IP addressக்கு தடா உத்தரவு போடுவது.
  • பிரச்சனைக்குரிய IP முகவரிகளை எல்லாரும் அறிய செய்வது.

இந்த தபா பிரச்சனைக்குரிய IP address: 202.174.158.14. பார்க்க: http://whois.sc/202.174.158.14

(இது போன்ற மறுமொழிகள் வருவது இது இரண்டாவது முறை.)

10 thoughts on “Time to start a IP blocklist for Tamil Blogs?”

  1. இதே மாதிரி (ஆனா வேற ஒரு) பிரச்சனை என் வலைப்பதிவுலயும் நடந்தது..
    இதையெல்லாம் கண்டுக்காம இப்படியே விட்டுறது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்..
    http://raasaa.blogspot.com/

  2. Navan

    You can report the abuse to noc@speedcast.com. I think this should be the same person who bad mouthed in PaRa’s blog. Someone needs to report the abuse. Don’t lose your heart over this and continue to do what you are doing… you are doing a great job.

    -dyno

  3. Ithe anubavam enakkum undu. Ennudaiya oru post ku comment koduthiruntha saka valaippathivaaLar oruvaraip patri thara kuRaivaana vimarsanam. antha IP sEmithu vaiththirunthEn. athE aal kusumban blog layum ithE vElaiya kaatti irukkaar. iRandum orE IP.iNaiyaththil ithellaam thavirkka mudiyaathu enRu thaan ninaikkiREn.

    IP yai palarum aRiyumpadi seithathu sariyaana seyal.

  4. ம்ம்… எங்க போயி முட்டிக்கிறது.. ரொம்ப முத்திப்போச்சு அப்பிடின்னு நெனச்சுக்கங்க நவன். இது யாரயிருக்கும்னு யோசனை பண்ணிகிட்டு உங்களது பொண்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  5. நவன்,
    எனக்கும் ஒருமுறை இப்படி ஆனது. சிலருக்கு ஒரு அரிப்பு இருக்கும், அல்லது வெளியிடமுடியாத எரிச்சல், அதை இப்படி எழுதுவதன்மூலம் சொரிந்துகொள்கிறார்கள். நீங்கள் இங்கே மற்றவர்கள் சொன்னதுபோல உங்கள் பாட்டுக்கு எழுதுங்கள்.

    இன்னொன்று, இது மின்னஞ்சல் அல்ல, ‘வாசிப்பார்கள், அல்லது கடாசிவிடுவார்கள்’ என்று எண்ணுவதற்கு. உடனே யாரும் கருத்து சொல்லாவிட்டாலும், மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் இரு மாதத்துக்குமேல் ஒன்றுமே எழுதாமல் இருந்தேனே, அப்போதும் தினமும் கூகிள் தேடலில் இருந்து யாராவது வந்து வாசித்துகொண்டே தான் இருந்தார்கள். இதுதான் என்னை மீண்டும் எழுதவும், இந்த வலைப்பதிவு சமூகத்தில் பணியாற்றவும் தூண்டியது. வாழ்த்துக்கள்.

  6. சமீபகாலமாக என் பதிவிலும்(http://rsl.blogspot.com) முகமூடி அணிந்து அருவருக்க தக்க பின்னூட்டங்களை எழுதி வருகிறார்கள். மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்தாமல், தயவு தாட்சண்யமின்றி அவற்றை அழித்து வருகிறேன்." கெட்டதாயின் வெட்டென DELETE" 🙂

  7. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

    டைனோ: I have reported the abuse. But I am not sure whether the ISP will respond to that. My past experiences in reporting spams and abuse to ISPs in Asia tells me that nothing will happen.

    உங்கள் மறுமொழிகளை படிக்கும் போது இது போன்ற நபர்களுடன் (நபருடன்?) உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு அனுபவம் இருப்பது தெரிகிறது.

    என்னைப் பொருத்த வரை இதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்தாக வேண்டும்.

  8. சொல்லவந்ததை நேருக்கு நேர் சொல்லாமல் ஏன் மறைந்து சொல்ல வேண்டும்? 🙄 கருத்து வேறுபாடு என்றாலும்கூட நேருக்கு நேர் சொல்லலாம். அல்லது புனைபெயரில் சொல்லலாம்.
    ஐஎஸ்பிக்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து நானறியேன். கலங்க வேண்டாம் நவன்.

  9. நவன், எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இவர்கள் முதுகெலும்பில்லாத கோழைகள்.இவர்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காமல், தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *