சிவராத்திரி

அப்பாவுக்கு நாளை உத்தியோகத்தில் இருந்து ரிடையர்மென்ட். நேத்து "30 வயது ஆயிடுச்சே பொறுப்பு அதிகமான மாதிரி ஒரு பயம் வர்தா"ன்னு சாகரன் கேட்ட போது வராத பயம் இன்னைக்கு லேசா எட்டி பார்க்கிற மாதிரி இருக்கு.

‘மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி’யெல்லாம் இது வரைக்கும் நான் ஒன்னும் பெரிசா செய்யலை. கூகிள்ல பகவதின்னு எங்க அப்பாவோட பேரை (யுனிகோட் கொண்டு) தேடினா என்னோட பக்கங்கள் தான் முதல்ல வருது. (ஆகா… பேர் சொல்லும் பிள்ளை)

உண்மையைச் சொல்லனும்னா இனிமே தான் எங்கப்பா பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய்யனும். எங்கப்பாக்கு என்னை IAS ஆக்கி பார்க்கனும்னு ரொம்ப ஆசை. என் மரமண்டையை வச்சுக்கிட்டு இந்த பொட்டி தட்டுற (கழட்டுற, உடைக்கிற) வேலை தான் பார்க்க முடிஞ்சது. எங்கப்பாவோட எதிர்பார்ப்புகள் ஒன்னு ரெண்டையாவது இனியாவது நிறைவேத்தலாம்னு பார்க்கிறேன்.

வழக்கம் போல கிஃப்ட் அனுப்ப வேண்டும் என்று நினைத்து வழக்கம் போலவே மறந்து கடைசியாக இப்போது தான் http://www.indiaonlineflorists.com/ தயவால பூக்கள் மட்டும் அனுப்பியிருக்கிறேன். 24 மணி நேர வாடிக்கையாளர் சேவைன்னு ஒரு நம்பர் போட்டிருந்தான். சரி ஃபோன் செஞ்சு கன்ஃபார்ம் செய்யலாம்னா, ம்ஹூம்… யாரும் எடுக்கலை. சரி எப்படியும் நாளைக்கு கொண்டு போய் சேர்த்திருவான்னு நம்பிக்கையிலே இருக்கேன்.

இப்பம் உடனடியா தீர்க்க வேண்டிய சில சில்லரை பிரச்சனைகள்:

நாளைக்கு க்ளையண்டுக்கு டெலிவரி கொடுக்க வேண்டிய ஒரு சாஃப்ட்வேர். இன்ஸ்டல்லேஷன் & கன்ஃபிகரேஷன்ல சில வேலைகள் இன்னமும் பாக்கி இருக்கு. அதை முடிக்க இன்னும் ஒரு 3 மணி நேரமாவது ஆகும்.

அதை விட முக்கியமா நான் லெக்சர் செய்ற பேப்பர்க்கு நாளைக்கு தான் இந்த செமஸ்டரோட கடைசி க்ளாஸ். அதுக்கு சில நோட்ஸ் வேற எடுக்கனும்.

மாம்போ ஓப்பன் சோர்ஸ் போட்டு லினக்ஸ் உலகம்னு திறந்து வைச்சுட்டேன். இப்பம் என்னடான்னு ‘Mambo OS’ல இருக்க சில பகுதிகள் எனக்கு தான் சொந்தம்னு ஒரு பெரியவர் கேஸ் போட்டிருக்கார். அது வேற என்ன ஆகப்போகுதுன்னு தெரியலை. உபயோகப்படுத்துற எனக்கே கலக்கமா இருக்கு. இந்த வழக்கு மட்டும் பொய்யாக இருக்கும் பட்சத்தில் இதனை உருவாக்கியவர்களின் மனநிலை?.

முதல்ல ஸ்கோ, லினக்ஸ் ஓப்பன் சோர்ஸ் இல்லைன்னு கேஸ் போட்டுது. இப்பம் இது. இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் போலிருக்கு. கடைசியிலே நல்லது நடந்தா சரி.

எப்படியோ இன்னைக்கு சிவராத்தி தான். நாளைக்கு பொழைச்சிருந்தா பார்ப்போம்.

2 thoughts on “சிவராத்திரி”

  1. பேர் சொல்லும் பிள்ளையே,
    எங்கப்பா பணி ஓய்வடைந்த நாளன்றைக்கு ஒரு கவித/லெட்டர் அனுப்பி மேடையில படிக்க வச்சேன். அம்புட்டுதான். மத்தபடி பேர் சொல்றேனான்னு கேட்டா முழிப்பேன்.
    அப்பாக்கள் பெரிய மனிதர்கள்!

  2. //அப்பாக்கள் பெரிய மனிதர்கள்!//

    சத்தியமான உண்மை.

    என் மனதில் இருந்ததை மூன்றே வார்த்தைகளில் சொல்லி விட்டீர்கள். இதைச் சொல்லத் தெரியாமல் தான் தினறிட்டிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>