தமிழிசை – பன்னிரு திருமுறை

தமிழ் மொழியின் வளர்ச்சியில் மதங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமன மதம் எந்த அளவிற்கு தமிழ் மொழிக்கு ஆக்கங்களை வழங்கியிருக்கிறதோ அதே அளவிற்கு சைவமும் (இசைத்தமிழுக்கு) வழங்கியிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

தமிழிசையில் உள்ள பண் மற்றும் யாப்பு முறைகளை தேவாரப் பாடல்களுடன் விளக்குகிறது சைவ சித்தாந்தத்தின் தளம். இங்கே அந்த பாடல்களை எம்பி3 வடிவில் கேட்கலாம். இது தவிர பன்னிரு திருமுறைகளில் உள்ள வேறு சில பாடல்களும் இங்கே கேட்க கிடைக்கின்றன. இந்த சுட்டியினை சொடுக்குங்கள் – http://gallery.shaivam.org/audio/neyveli.htm.

இந்த பாடல்களெல்லாம் MP3 வடிவிலேயே கிடைப்பதால், அவற்றை நீங்கள் உங்கள் கணினியில் இறக்கி வைத்துக் கொண்டு வேண்டும் போதெல்லாம் கேட்கலாம்.

இந்த பாடல்களை பாடியிருப்பவர்கள் தொழில்முறை பாடக/பாடகியர் அல்ல. ஓதுவார்களால் பயிற்றுவிக்கப் பட்ட குழந்தைகள். கேட்டு பாருங்களேன். சிதம்பரம், சீர்காழி என்று ஏதோ சைவத் திருத்தலத்திற்கு போய் வந்த மாதிரி மன மலர்ச்சி கிடைக்கும்.

சுட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *