ஜிமெயிலும் அமெரிக்க தேசபக்தியும்

இந்த ‘ஜிமெயில்’ வந்தாலும் வந்தது, பார்க்கிறவனெல்லாம் "ஜிமெயில் இன்விடேஷன்!" "ஜிமெயில் இன்விடேஷன்!!!"ன்னு கூவி கூவி வித்துட்டிருக்கான்.

  1. ‘ஈபே’ல (Ebay) தண்டோரா போடாத குறையா ஜிமெயில் இன்விடேஷனை ஏலம் போடுறாங்க. சரி, ஏதோ ஏழை பாழைங்க… பத்தாத குறை. வயித்து பொழப்புக்கு ஏதோ செய்றாங்கன்னு நினைச்சு விட்டுடலாம்.
  2. ஆனா ‘தானம் கிடைச்ச மாட்டோட பல் பிடிச்சு பார்த்த கதை‘ ஒன்னு ஜிமெயில் விசயத்திலே நடந்துட்டிருக்கு. நம்ம மக்கள் கூகிள் குடுக்கிற 1GB இடத்தை மெயிலுக்காக உபயோகிக்கிறதுக்கு பதிலா அதை ஒரு ‘டிஸ்க்’ (Disk) மாதிரி கோப்புகளை சேமித்து வைக்க உபயோகப்படுத்த (சதித்)திட்டம் தீட்டியிருக்காங்க!. ‘GmailFS‘ போய் பாருங்க, விசயம் புரியும். லினக்ஸ் கணினிகளில் ஜிமெயில் அக்கௌன்டை ஒரு ஃபைல் ஸிஸ்டம் மாதிரி இனைச்சுக்கலாமாமாம்… அப்புறம் என்ன பாட்டுலயிருந்து படம் வரைக்கும் என்ன வேனும்னாலும் ஜிமெயில் கணக்கிலே ஏத்திக்கலாம்.
  3. இந்த ‘அமெரிக்கர்களோட தேசபக்தி‘யை என்னன்னு சொல்றது!. மணிரத்னம் மட்டும் ஹாலிவுட்டுல ரோஜா படத்தை எடுத்திருந்தா பிச்சுட்டு போயிருக்கும் போலிருக்கு.

    இப்பம் கடைசியா அமெரிக்கர்கள் தங்கள் தேசபக்தியை காட்டியிருப்பது இந்த ஜிமெயில் இண்விடேஷன் விசயத்தில தான். Gmail4troops போய் பாருங்க. வெளிநாட்டில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு இந்த தளத்தில் இலவசமா ஜிமெயில் இன்விடேஷன் குடுக்கிறாங்களாம்.

அட போங்கப்பா. நானும் எனக்கு யாராவது இன்விடேஷன் அனுப்புவாங்கன்னு எதிர்பார்த்து காத்திருந்தது தான் மிச்சம். ம்ஹூம்…. ஒன்னும் ஆகுற வகையா இல்லை. பேசாமா ‘ஈ பே’ ல 1 டாலர் கட்டி வாங்கிக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.

7 thoughts on “ஜிமெயிலும் அமெரிக்க தேசபக்தியும்”

  1. நவன், உங்க மின்னஞ்சல் அனுப்பிவைங்க. எங்கிட்ட ஆறு invite இருக்கு :0)

  2. என் மின்னஞ்சல் கொடுக்க மறந்துட்டேன். rarunach at gmail dot com.

  3. [2]

    ரொம்ப நன்றி ரமணி. இன்னைக்கு ஏற்கெனவே சாகரன் மூலமா ஒரு அழைப்பு வந்துடுச்சு.

    ஜிமெயில்ல navakrish ங்கிற பேரையும் பதிவு செய்திட்டேன். 😀

    ரமணி, சாகரன், மதி எல்லாருக்கும் நன்றி.

    (நேத்து மறுமொழி பெட்டி வேலை செயயலைன்னு சாகரன் சொன்னார். என்ன ஏதுன்னு பாக்கனும் 😯 )

  4. நானும் குடுக்கலாமான்னு வந்தா ஏற்கெனவே செட்டிலாயிருக்கு 🙂

  5. ¿¢ƒÁ¡¸ ¯í¸ÙìÌ ƒ¢¦Á¢ø §ÅñÎÁ¡?
    "¬õ" ±ýÈ¡ø þ§¾¡ «ÛôÒ¸¢§Èý!
    ¸¡òÐ즸¡ñÊÕ츢§Èý!

    ¼ý ¸½ì¸¢ø «ýÒ¼ý,
    ±Š.§¸

  6. மன்னிக்கவும்!
    திஸ்கி-யில் எழுதிவிட்டேன்!
    படிக்க முடிகிறதா?

  7. என் நெஞ்சை தொட்டுட்டீங்க மக்களே. அனைவரின் அன்புக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *