உனக்கு வேணும்டா இது

எனக்கே கேவலமா இருக்கு. வடிவேல் சொல்ற மாதிரி என்னை பார்த்து நானே "உனக்கு வேணும்டா இது. உனக்கு வேணும்" என்று புலம்பி கொண்டிருக்கிண்றேன். "ஏன்டா நல்லா தானடா இருந்தே? ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே?" என்று கண்ணாடி என்னை பார்த்து கேட்பது தெரிகிறது.

பெரிய மனிதன் மாதிரி வலையில் பதிய ஆரம்பித்து விட்டு இப்படி "வெறும் கடையை" திறந்து வைத்திருப்பதற்கு தான் கேவலமா இருக்கு. சும்மா ஒரு வேகத்தில் வலை பதிய ஆரம்பித்துவிட்டேன்.

நான் எப்பொழுதுமே இப்படி தான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசிப்பது என்ற பழக்கமே கிடையாது. எதிலாவது காலை விட்டு விட்டு திரு திருவென முழிப்பதே வாடிக்கையாகிவிட்டது. ஏதோ எல்லாரும் வலை பதிவு போடுகின்றார்களே என்று நானும் ஒன்றை ஆரம்பித்து விட்டேன். ஆனா எதை பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை.

முதலில் என்னவெல்லாமோ எழுதலாம் என்று கை பரபரத்தது. நெடுங்காலமாய் நன்பர்களோடு உட்கார்ந்து பேசிய விடயங்கள் பலவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன். சமுதாயம், உளவிவியல், அறிவியல், ஆண்மீகம், அரசியல், வாழ்க்கை என்று எழுதுவதற்கு விடயங்களா இல்லை. ஆனால் எழுதுவதற்கு தான் கை ஓட மாட்டேன் என்கிறது. குணா கமல் மாதிரி "அதை எழுதனும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டேங்குது".

ஏன் இந்த குழப்பம்? நினைத்து பார்க்கையில் இந்த குழப்பம் என் வாழ்க்கையில் அனைத்து கால கட்டத்திலும் என்னை தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

வீட்டிற்கோ, நண்பர்களுக்கோ கடிதம் கூட இது வரை எழுதியதில்லை. ஏன் personal E-Mails எழுதவது கூட எனக்குக கடினமான விடயம் தான். கடிதம் எழுத உட்கார்ந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதற்கு பதிலாக தொலைபேசி மூலமாக பேசி விடலாம் என்று பல முறை பேசியிருக்கிறேன். இவ்வளவு ஏன்? எழுதிய கடிததை தபாலில் சேர்க்காமல் கையிலேயே வைத்திருந்து பிறகு அந்த நண்பரை நேரில் சந்திக்கும் போது கையில் கொடுத்திருக்கிறன்.

சரி. இப்போது என்ன தான் செய்வதாக உத்தேசம். சத்தம் போடாம இப்படி கிறுக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்திவிடலாமா? ஆகா நல்லா இருக்கே. கிறுக்க தான் ஆரம்பித்தாகிவிட்டதே. சிறு பிள்ளை போல் கிறுக்கி தள்ளுவோம். இன்னும் சில நாட்களுக்குள் தெளிவாக இது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று தெரிந்துவிடாதா என்ன?

ஆனால் அதற்கு தினமும் ஏதாவது எழுதி பழக வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.

சித்திரமும் கை பழக்கம் தானே.

3 thoughts on “உனக்கு வேணும்டா இது”

 1. maple, vaazhthukkal. nalla kirukki thallu. nee ivvalo thiramaiya kirukkuvennu enakku ithu varaikkum theriyaathu. seekiram nalla kirukkan -nnu per vaangu!
  valaiyil ulla thamil mozhi peyarchi romba nalla irukku.
  unnoda valaiyil sikkiya nanban,
  ganapathy

 2. வலைப்பதிவாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாதிரி புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. உங்கள் விருப்பம்போல் எழுதுங்க, இதுக்காக யாரும் நம்ம தலைய வெட்டிட மாட்டாங்க.ஹா.. ஹா.. ஹா

 3. ஆங்… அது தான் நானும் முடிவு செய்துட்டேன். 🙄

  அது சரி சங்கரய்யா நீங்க என்னை விட பெரிய ‘கிறுக்கனா’ இருப்பீங்க போல. ‘கிறுக்கனின் கிறுக்கல்கள்’. அப்படி போட்டு தாக்குங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *