அந்த காலத்தில்

என் தம்பி இந்த வருஷம் +2 எழுதிருந்தான். போன வாரம் ரிசல்ட் வந்து பார்த்தால் 1101 மார்க் எடுத்திருக்கான். டேய் நல்ல மார்க்குடா. அடுத்து என்ன படிக்கலாம்னு இருக்கேன்னு கேட்டால், இது ரொம்ப கம்மியான மார்க் engineering, medical! எதுவும் கிடைக்காது அப்படிங்காங்க.

நானெல்லாம் படிக்கும் போது எப்படியாவது 1000 மார்க் வாங்குடா. அப்போது தான் professional college சீட் கிடைக்கும்னு வீட்டிலே எல்லாரும் சொல்லி
சொல்லி (விரட்டி விரட்டி) நானும் நல்ல பிள்ளையாக படிக்க முயற்சித்தும்
கிடைத்த மார்க் என்னமோ 830 தான். அப்புறம் நானும் என்ன என்னலாமோ
டகால்டிதனம் செய்து ஒரு மாதிரியா ஒரு வேலையில உக்கார்ந்த்தேன்.

ஆனா இவனை கேட்டால் 1101 மார்க் மோசமான மார்க்காம். என்ன competetive
world. எனக்கு தான் எதுவும் புரிய மாட்டேங்குது. சரி private enginerring
college அல்லது மெடிகல் காலேஜ்ல சேர வேண்டியது தானே அப்படின்னா, நல்ல
காலேஜிலே சீட் கிடைக்க தொடக்கத்திலேயே 3 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவலிக்கனுமாம் (donation என்று வாசிக்வும்). அந்த காலத்தில எல்லாம் ஒரு பவுன் தங்கம் 20 ரூபாய் தான் தெரியுமா என்று எனது பூட்டி (பாட்டியின்
அம்மா) சொன்ன போது கிண்டல் செய்தது தான் நினைவு வருகிறது.

One thought on “அந்த காலத்தில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *