ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மோகினி பரத்வாஜ்

கடனில் தத்தளித்த ஒரு ஒலிம்பிக்ஸ் வீரங்கனைக்கு ‘நடிகை ரம்பா’ பண உதவி செய்து, அந்த உதவியால் அந்த வீராங்கனை ஒலிம்பிக் பதக்கம் வென்று வந்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா?

நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா. சரி தலைப்பை மீண்டும் படியுங்கள். ‘மோகினி பரத்வாஜ்’ – கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க அணியின் ஒரு அங்கத்தினர் தான் மோகினி பரதவாஜ்.

மோகினி பரத்வாஜ்

இவருக்கு ரம்பா உதவி செய்தாரா!? என்ன காதில பூ சுத்துறான்னு பாக்குறீங்களா?

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். உங்களை ஏமாத்த முடியுமா? ரம்பாவே தான் கடனில் தத்தளிக்கிறாரே. ரம்பான்னா ரம்பா இல்லை. ‘ரம்பா’வை அழிச்சுட்டு ‘பமீலா’ன்னு படிச்சுக்குங்க.

மோகினி இந்த வருட துவத்தில் தனது கிரெடிட் கார்ட் பில் கூட கட்ட முடியாமல், கடன் தொல்லையில் பரிதவித்துள்ளார். பயிற்சி முகாமிற்கு கூட செல்ல முடியாத நிலை. இவரது பிரச்சனையை கேள்விப்பட்ட பமீலா ஆண்டர்சென் $25,000 அமெரிக்க டாலருக்கான காசோலை குடுத்து உதவி செய்துள்ளார். அதோடு நில்லாமல் மோகினிக்காக ஒரு அறக்கட்டளையும் தொடங்கி அதன் மூலமும் பணம் வசூலித்து கொடுத்துள்ளார்.

அப்புறம் கல்பனா சாவ்லாவின் சாதனைகளுக்காக பெருமை படும் நம்மவர்கள், காலரை தூக்கி விட்டுக்கொள்ள ஒரு செய்தி: மோகினி பரத்வாஜ் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். “அது தான் பேரை பார்த்தாலே தெரியுதே”ங்கிறீங்களா?

மோகினி பரதவாஜை பற்றி மேலும் சில விபரங்கள்

  • பிறந்த தேதி: 29 செப்டம்பர், 1978
  • அம்மாவின் பெயர்: இந்து
  • அப்பாவின் பெயர்: Kashual (தமிழில் எப்படி எழுதுறதுன்னு தெரியலை)
  • ஒரு தம்பி: அருண், வயது: 24
  • வசிப்பது: லாஸ் ஏஞ்சலிஸ்
  • பிடித்த நகரம்: பாரீஸ்
  • பொழுது போக்கு: புத்தகம் வாசிப்பது, நடனம்
  • விருப்பம்: சட்டம் பயில்வது

1996 ஒலிம்பிக்ஸிற்கு தேர்வாக தவறிய பின் ஜிம்னாஸ்டிக்ஸிலிருந்து விலகி கல்லூரி படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். கல்லூரி முடித்த பின் மீண்டும் விளையாட்டில் மீண்டும் கவனம் திரும்ப, இன்று (பமீலா புண்ணியத்தில்) ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டிற்கு வயது ஒரு தடையல்ல என்று தனது 27ஆவது வயதில் நிரூபித்துள்ளார்.

4 thoughts on “ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மோகினி பரத்வாஜ்”

  1. indhiya vazhiyai sernthavar nnu aaruthal pattaalum, perumai pada mudiyalai… namma naattula pala veerargal kadan padaama irunthum, perusaa saathikka vasathi vaaippugal illaiyennu aathangam thaan minjuthu. mogini, leander paes, anand vishwanath etc.. ellorum veli naattil payirchi seivathu oru kasappaana unmaiyai oorjitham seigirathu.

  2. கணபதி, வெளிநாட்டில் பயிற்சி செய்தாலும் ல்லியாண்டர்/மகேஷின் வெற்றிகள் பலரை டென்னிஸின் பக்கம் திருப்பியது உண்மை.

    மோகினி பரத்வாஜ், கல்பனா சாவ்லா போன்றோரின் சாதனைகளுக்காக இந்தியர்களாக நாம் பெருமைப் படுகிறோமோ இல்லையோ பல இளைஞர்களுக்கு இவர்களது சாதனைகள் ஒரு தூண்டு சக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *