உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 3


பாகம் 1 2 3 4 5

உங்கள் கணினி ஸ்பைவேர்/ஆட்வேர்’ஆல் தாக்கப்பட்டால் அதனை மீட்பதற்கு சில மென்பொருட்கள் இருக்கின்றன. அடுத்த சில இடுகைகளில் இதற்கு உதவும் சில மென்பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

அந்த வரிசையில் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருளான ஆட்-அவேர் (adaware) பற்றி இன்று பார்ப்போம் .

நீங்கள் ஸ்பைவேர்/ஆட்வேர் பற்றி இன்னமும் அறிந்திருக்கவில்லை
என்றால் இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம்.

இந்த மென்பொருளினை இலாப-நோக்கில்லாத ‘தனி நபர்’ பயன்பாட்டிற்கு இலவசமாக உபயோகிக்கும் உரிமையினை இதன் தயாரிப்பாளர்களான லாவாசாஃப்ட் நிறுவனத்தார் வழங்கியுள்ளனர்.

1. ஆட்-அவேரை டௌன்லோடு செய்யுங்கள்

http://www.lavasoftusa.com/support/download/ என்ற தளத்திற்கு செல்வதன் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

லாவாசாஃப்ட

2. உங்கள் கணினியில் நிறுவுங்கள்

நீங்கள் பதிவிறக்கம் செய்த கோப்பினை இயக்குவதன் மூலம் ஆட்-அவேரினை உங்கள் கணினியில் நிறுவலாம். இந்த கோப்பின் பெயர் aaw6.exe என்று இருக்கும். இந்த பெயரில் கடைசியில் வரும் ‘6’ என்ற எண் இந்த மென்பொருளின் தற்போதைய வெர்சனை (version) குறிக்கிறது. அடுத்த வெளியீடு வரும் போது இந்த எண் மாறக்கூடும்.

3. அட்-அவேரை தொடங்குங்கள்.

ஆட்-அவேரின் தொடங்கியவுடன் கீழே தெரிவது போன்ற ஒரு பக்கத்தினை பார்ப்பீர்கள்.

adaware1

4. அப்டேட் செய்யுங்கள்

இந்த ஆட்-அவேரும் ஒரு ஆண்டி-வைரஸ் போல தான். இது வழங்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அநுபவிக்க வேண்டுமாயின் இதனை அப்டேட் செய்தாக வேண்டும். இதனை அப்டேட் செய்யவதற்கு "Check for updates
now" என்பதை சொடுக்கங்கள்.

aw_update

அடுத்த பக்கத்தில் ‘Connect’ என்பதை சொடுக்குங்கள்.

up_unavailable

புதிய அப்டேட்கள் இல்லையென்றால் பரவாயில்லை. கீழே தெரிவது போன்ற மெஸ்ஸேஜ் உங்கள் திரையில் தெரிந்தால், அட்-அவேரின் புதிய அப்டேட் வெளிவந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

up_available

இப்பொது ‘OK’ என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் புதிய அப்டேட்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

aw_up_progress

அப்டேட் முடியும் வரை காத்திருங்கள்.

5. ஸ்பைவேரை விரட்டுங்கள்

முடிந்த பின் ‘Start’ என்ற பொத்தானை அழுத்துங்கள்.

start_scan

‘Perform smart system-scan’ என்பதை தேர்வு செய்து ‘Next’ என்ற பொத்தானை அழுத்துங்கள்.

scan_progress

இப்பொழுது ஆட்-அவேர் உங்கள் கணினியில் உள்ள ஆட்-வேர் மற்றும் ஸ்பைவேரை தேடி கண்டுபிடிக்கும். தேடுதல் முடிவடைந்த பின் இது போன்ற ஒரு ஸ்க்ரீனை பார்ப்பீர்கள்.

scan_result

இப்பொழுது ‘Next’ என்ற பொத்தானை அழுத்துங்கள்.

cleaning

அடுத்து ‘Next’ என்ற பொத்தானை மீண்டும் அழுத்துங்கள்.

cl_confirm

இப்பொழுது ஆட்-அவேர் தான் கண்டுபிடித்த பொருட்களை நீக்குவதற்கு உங்கள் அனுமதியினை கேட்கும். ”OK’ என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அம்புட்டு தான். உங்கள் கணினி சோப் போட்டு கழுவின மாதிரி கொஞ்சம் சுத்தமாகியிருக்கும். இது தவிர டெட்டால் அப்புறம் ப்ளீச் போட்டு கழுவுறதுக்கு வேற ஸாஃப்ட்வேர் எல்லாம் இருக்கிறது.

அப்புறம் முக்கியமான விசயம் என்னவென்றால், இதை நீங்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது செய்யவேண்டும். ஏனென்றால் ‘Security is not a technology. It is a process’.

பாதுகாப்பிற்கு தேவையான மென்பொருட்களின் அறிமுகம் தொடரும்…

3 thoughts on “உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 3”

  1. //அம்புட்டு தான். உங்கள் கணினி சோப் போட்டு கழுவின மாதிரி கொஞ்சம் சுத்தமாகியிருக்கும். இது தவிர டெட்டால் அப்புறம் ப்ளீச் போட்டு கழுவுறதுக்கு வேற ஸாஃப்ட்வேர் எல்லாம் இருக்கிறது. //

    அதேதான்…அந்த சமாசாரங்களையும் எடுத்து உடுங்க கேப்போம், இல்லை பாப்போம், தெரிஞ்சுக்குவோம்.

    படங்களுடன் விளக்குவது நன்றாக இருக்கிறது. உங்கள் உழைப்புத் தெரிகிறது. நன்றி.

  2. இன்னொண்ணு, ‘லண்டனு’க்கெல்லாம் ‘இலண்டன்’ போடுற அளவுக்கு இலக்கணம் பார்க்கணுமா?

  3. //இன்னொண்ணு, ‘லண்டனு’க்கெல்லாம் ‘இலண்டன்’ போடுற அளவுக்கு இலக்கணம் பார்க்கணுமா?//

    ஐயோ… எனக்கு இலக்கணமெல்லாம் தெரியாதுங்க. தெரிஞ்சா தானே இலக்கணம் பார்க்கிறது. ஆங்கிலம், ஹிந்தி, கொஞ்சம் தமிழ்’ன்னு எந்த மொழியையும் உருப்படியா படிக்காத சராசரி இங்கிலிஸ் மீடியம் கல்வி என்னுடையது. ஏதோ இப்பம் தான் முதன்முதலா எழுத முயற்சி செய்திட்டிருக்கேன். மத்தப்படி இலக்கண சுத்தமா ஒரு வார்த்தை இருந்தா கூட அது முயற்சி செய்து வந்ததில்லை. ஏதோ தானா வந்து விழுந்ததா இருக்கும்.

    நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது.. இலக்கணம் சரியா இருக்க வேண்டி ரொம்ப கஷ்டப்படவேண்டாம்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *