பிள்ளையார் சுழி

கடந்த ஒரு வாரமாக நான் வாசிக்க நேரிட்ட சில இனைய பக்கங்களின் பாதிப்பு தான் இது. சென்ற வாரம் பொழுது போகாத ஒரு சனிக்கிழமை அன்று நவன் என்ற எனது புனைப்பெயரில் பிரபலமான தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்று கூகிள் இனைய தளத்தின் மூலமாக தேடினேன்.

அப்போது தான் இந்த இனைய பக்கத்தினை பார்க்க நேரிட்டது http://navan.jokealot.net/index.php?m=200404#post-111. ஆஹா! நம்மை போலவே ஒருவர் வெளி நாட்டுக்கு வந்து நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை ‘நவன்’ என்று மாற்றி வைத்துள்ளதை நினைத்து வியந்த அதே வேளையில் தமிழில் படைக்கப்பட்டுள்ள பல வலைப்பூக்களுக்கு (weblogs) அது வழி காட்டியது. அதன் விளைவு (மற்றும் எனது ஆர்வக்கோளாறு தான் இந்த கிறுக்கல்.

Weblogs என்ற புதிய இனைய தொழில் நுட்பம் தமிழுக்கு புத்துயிர் குடுத்திருப்பதாக தோன்றுகிறது. தமிழில் அறிவியல்/தொழில்நுட்ப படைப்புகள் வந்தவாறு தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு சுட்டி இதோ .. காசியின் என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு.

சரி நமது தமிழ் மொழியில் நாமும் தான் சிரிது தட்டச்சு பழகி பார்ப்போபமே என்று முயன்றேன்… கொஞ்சம் கடினம் தான் என்றாலும் நன்றாக தான் இருக்கிறது இதுவும்.

“NUCLEUS” மென்பொருளை தமிழில் மாற்றி அமைத்து தந்திருக்கும் திரு.காசி அவர்களுக்கு நன்றி. மற்றும் கணிணியில் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் எனது நன்றி. இறுதியாக எனது பார்வை தமிழ் பதிப்புகளின் பக்கம் திரும்ப காரணமாக இருந்த US நவனுக்கு special thanks.

அதே நேரத்தில் அனைவரும் எனது (எழுத்து பிழைகளை பொருத்தருள வேண்டுகிறேன். சிறு வயதில் "கொடி" என்பதற்கு பதில் "கேடி" என்று எழுதி அதை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செயவதை நினைக்கும் போது பயமாக உள்ளது.

(துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…)

3 thoughts on “பிள்ளையார் சுழி”

  1. வாங்க் னவன்..நான் us navan என்னுதான் இங்க வந்தேன்..//சிறு வயதில் "கொடி" என்பதற்கு பதில் "கேடி" என்று எழுதி அதை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செயவதை நினைக்கும் போது பயமாக உள்ளது. // Welcome to the club !!
    😀

  2. ரவியா, மிக்க நன்றி இங்கே வந்ததற்கு.

    தெளிவா சொல்லனும்னா "தேசியக் கொடி"யை தான் "தேசிய கேடி"ன்னு மாத்தினேன். இன்னும் இது வரைக்கும் இங்கே அது மாதிரி எத்தனை கொலை செய்திருக்கேனோ தெரியலை.

    யாராவது ஆள் வைத்து அடிப்பதற்கு முன்பாக தமிழ் சமுதாயத்திடம் பெரிய மன்னிப்பு கேட்க வேண்டும். 😈

    அது சரி மன்னிப்பு – 2 சுழியா 3 சுழியா (மண்ணிப்பு) தெரியவில்லையே. 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *