விண்டோஸ் அப்டேட் – II

< << முதல் பாகம் >>>

சென்ற பதிவில் விண்டேஸ் அப்டேட் செய்வதன் அவசியத்தையும் செய்முறையையும் பார்த்தோம். இன்று இந்த விண்டோஸ் அப்டேட் செயவதை தானியங்கி முறை படி இயங்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் விண்டோஸில் "Control Panel" என்னும் இடத்திற்கு நீங்கள் போகவேண்டும். இந்த ‘Control Panel’ என்பது உங்கள் விண்டோஸ் செயலியை நீங்கள் கட்டுபடுத்த உபயோகிக்கும் ஒரு *கட்டுப்பாட்டு அறை* என்று நினைத்துக்கொள்ளலாம். சரி எப்படி இந்த ‘Control Panel’க்கு செல்வது. அது எங்கேயிருக்கிறது என்கிறீர்களா. மிகவும் எளிது.

1. விண்டோஸின் ‘Start’ பொத்தானை அமுத்துங்கள்.
2. அடுத்து வரும் ‘Start Menu’வில் ‘Settings’ என்பதை சொடுக்கி
3. அடுத்ததாக ‘Control Panel’ என்பதை தேர்வு செய்தால் இதோ நீங்கள் ‘Control Panel’க்குள் வந்துவிட்டீர்கள்.

விண்டோஸ் XP உப்யோகிப்பவர்களுக்கு:

கேடகிரி வியூ

உங்கள் ‘Control Panel’ மேலுள்ள மாதிரி தெரிந்தால் அந்த சாளரத்தின் இடது பக்கம் நீங்கள் பார்க்கும் ‘Switch to Classic View’ என்பதை சொடுக்குங்கள். இது உங்களை ‘Category View’விலிருந்து ‘Classic View’விற்கு கொண்டு செல்லும். இந்த ‘Category View’ என்பது கணினியை உபயோகிக்க தெரியாதவர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்தியது, நமக்கு அது வேண்டாம். நாம தான் கணினியில் கில்லாடிகளாயிற்றே!

க்ளாசிக் வியூ

அடுத்து ‘System’ என்பதை இரண்டு முறை சொடுக்குங்கள் (double click).

இப்பொழுது ‘Automatic Updates’ என்ற பக்கத்தை தேர்வு செய்யுங்கள்.

automatic updates

அனைவருக்கும் ஏதுவான வழி

இப்பொழுது ‘Download the updates automatically and notify me when they are ready to be installed’ என்பதை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு முறை வலையினைப்பு செய்யும் போதும் இனிமேல் விண்டோஸ் தானாகவே புதிய ‘அப்டேட்’கள் வந்திருந்தால் பதிவிறக்கம் செய்து விட்டு அதனை நிறுவுவதற்கு முன்னால் உங்களுக்கு அறிவிக்கும்.

ப்ராட்பேண்ட் இனைப்பு வைத்திருப்பவர்களுக்கான எளிய வழி

நீங்கள் DSL அல்லது Cable மூலம் அதிவேக நிரந்தர இனைப்பு வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ‘Automaticall download the updates, and install them on the schedule that I specify’ என்பதை தேர்வு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் கணினியை உபயோகிக்காத நேரத்தில் விண்டோஸ் அதுவாகவே ‘அப்டேட்’களை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு செய்ய முடியும்.

என் வழி தனி வழி என்போருக்கு

நீங்கள் மேல கூறிய இரண்டில் எதையுமே தேர்வு செய்யாவிட்டாலும் மேலே படத்தில் தெரியும் 3 தேர்வுகளில் முதல் தேர்வினை (Notify me before downloading any updates and again notify me before installing them on my computer) தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் புதிய அப்டேட் ஏதும் வெளிவந்தவுடனேயே விண்டோஸ் உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கம். அதற்கப்புறம் புதிய ‘அப்டேட்’களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுவது உங்கள் சமத்து.

நினைவில் கொள்ளுங்கள்

மாதத்திற்கு ஒரு முறை மைக்ரோசாஃப்ட் வெளியிடும் பேட்ச்கள் தவிர இடை பட்ட காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பேட்ச் வெளிவரலாம். பல நேரங்களில் உங்கள் ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கபட்ட சில மணி நேரங்களிலேயோ அல்லது ஓரிரு நாட்களிலேயோ விண்டோஸ் பேட்ச் வெளி வர வாய்ப்புண்டு. இந்த விண்டோஸ் பேட்ச் வெளி வந்த உடனேயே அதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுவது அவசியம். இல்லையெனில் இந்த பாதுகாப்பு குறைபாடை உப்யோகித்து வைரஸோ அல்லது வார்மோ (worm) உங்கள் கணினியை தாக்கும் அபாயம் உண்டு.

அடுத்த பதிவில் விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க தேவையான இன்ன பிற விடயங்களும் அத்தியாவசியமான மென்பொருள்களும்.

4 thoughts on “விண்டோஸ் அப்டேட் – II”

  1. நல்ல முயற்சி.

    (ஆமா. சினேகா படம் போடலைன்னா வைரஸ் வருமாங்க?)

  2. வைரஸ் வருமான்னு தெரியலை. ஆனா இந்த வால்பேபர் மாத்தினதுக்கு அப்புறம் எழுதுறதுக்கு மூட் வருது. 🙂

  3. அப்புறம் நவன் சொல்ல மறந்துட்டேன். ரொம்ப நன்றி… இங்கே வந்திருந்ததுக்கும் உங்கள் கருத்தை தெரிவித்தற்கும்.

    (உங்களோட ‘நான் நவன் ஆன கதை’யை ரொம்ப இரசித்து படித்தேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *