Sim Cityயும் Simputerஉம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.

லினக்ஸ் அடிப்படையில் அமைந்த குறைந்த விலை கணினி என்பதால் சமூகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கணினியையும், இணையத்தையும் எடுத்த செல்ல இது உதவும் என்று நம்பப்பட்டது. E-governence, ‘bridging the digital divide’ என்று சிம்புயூட்டர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. வந்த சில நாட்களில் பெரும்பாலானோர் இதனை ஒரு ‘glorified technology’ என்ற மறந்த விட – சிம்புயூட்டர் ஆர்வலர்கள் இன்னமும் இந்த தொழில் நுட்பத்தை சிறப்பாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

குறைந்த பட்சம் பெங்களூர் போக்குவரத்து காவல்துறையின் அன்றான வேலைகளை எளிதாக்க சிம்புயூட்டர் பெரிதும் உதவி வருகிறது. டெல்லி காவல்துறையும் விரைவிலேயே சிம்புயூட்டரை அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிகிறது.

லைசன்ஸ் எடுக்காதவர்கள் எல்லாம் உடனடியாக லைசன்ஸ் எடுத்துவிடுவது நல்லது. லைசன்ஸே இல்லாமல் ‘வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்து விட்டேன்’ என்று நல்ல பிள்ளை மாதிரி ட்ராமா போடுவது இனிமேல் காவலர்களிடம் எடுபடாது.

“In one case, we fined a van driver for 10 previous violations,” Bangalore police commissioner, Ajai Kumar Singh, told the BBC.

தொடர்புடைய சுட்டிகள்:

* Woe for traffic offenders in Sim city – BBC
* Bangalore cops flip for India’s answer to palmtops

2 thoughts on “Sim Cityயும் Simputerஉம்”

  1. முதல் வரியை படித்தவுடன் சற்று ஏமாற்றமாக இருந்தது.. ஆனால் கட்டுரையின் முடிவில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது {என் கணவர் சிம்ப்யூடர் செய்யும் பிகோபீடாவின் advisory boardல் இருக்கிறார் :-)}

  2. ரம்யா,

    சிம்ப்யூட்டர் ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது சில காரணங்களால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடவில்லை என்பதை தான் எழுதியிருந்தேன்.

    ஆனால் இந்த நிலை மாறலாம்.

    மற்றபடி இந்த முயற்சியில் உங்கள் கணவரின் பங்களிப்பும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *