கூகிளில் யுனிகோடுடன் தேடல்

மகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.

இவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.

ஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் "வலைப்பூ" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. "காசி தமிழ்" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.

வாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.

2 thoughts on “கூகிளில் யுனிகோடுடன் தேடல்”

  1. http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.

    Same pinch 🙂
    நானும் இந்த மாதிரி நிறைய தடவ தப்பு பண்ணியிருக்கேன்

  2. அதுக்குத்தான் என்னை மாதிரி favourites ல links ஐ போட்டு வைச்சி கொள்ளனும்!:D

    நவன்..தமிழ்ல தட்டச்ச ஒரு சுட்டி போடுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *