MSN Spaces

MSN வலைப்பதிவுகளுக்கான புதிய சேவை

மைக்ரோஸாஃப்டும் கோதாவில் இறங்கி விட்டது.

சில நாட்களாக ஜப்பானில் மட்டும் கிடைத்து வந்த MSN Spaces என்னும் மைக்ரோஸாஃப்டின் ‘வலைப்பதிவு சேவை’ இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது.

மற்ற வலைப்பதிவுகளில் இருந்து எப்படி வேறு படுகிறது? முதல் பார்வையில் என் கண்ணில் பட்ட இரண்டு விசயங்கள்:

  1. மொபைல் ஃபோனில் இருந்து உங்கள் வலைப்பதிவில் செய்திகளையும் படங்களையும் இணைப்பது சுலபமாக இருக்கும்.
  2. MSN மெஸ்ஸஞ்சரில் உள்ள உங்கள் நண்பர்கள் மட்டுமே உங்கள் வலைப்பதிவை பார்க்கும் படி செய்யலாம். தான் எழுதுவதை மற்றவர்கள் பார்க்க வேண்டாம் எழுதியதை நண்பர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

யுனிகோடு எழுத்துக்களை தெரியவைப்பதற்காக தனியாக மாற்றங்கள் ஏதும் செய்யத் தேவையிருக்கவில்லை. ஆனால் முழுவதும் தமிழ் மொழியில் வலைப்பதிவின் இடைமுகத்தை காட்டுவதற்கு வழிவகை இருப்பதாக தெரியவில்லை. அல்லது என் கண்ணில் படவில்லை.

சோதனை முறையில் அமைந்த ஒரு தமிழ் பக்கம் இங்கே.

விட்டுப் போன விபரங்கள்: (3:47 pm)

  • 2005 ஜூன் மாதம் வாக்கில் இப்போதைய பீட்டா சோதனைகள் முடிந்து முழு வீச்சில் இந்த சேவை செயல்பட துவங்கும் (Yahoo News).
  • புதிய பதிவுகள் இணைக்கப்பட்டதை மெஸ்ஸஞ்சர் வழியாக நண்பர்கள் (தானாகவே) அறியும் படி செய்ய முடியும்.

பிளாக்கர் போன்ற முன்னோடிகளுடன் போட்டியிட வேண்டுமென்றால் மைக்ரோஸாஃப்ட் மேலும் பல புதுமைகளை புகுத்த வேண்டியிருக்கும். இப்போது இருப்பது அவசர சமையலாக இருக்கலாம். உள்ளே இன்னும் சமையல் நடந்துக் கொண்டிருக்கும். இணைய சேவைகளில் பல முனைகளில் பின் தங்கிவிட்ட மைக்ரோஸாஃப்ட் இந்த ரேஸிலாவது தாக்குப் பிடுக்குமா?

2 thoughts on “MSN Spaces

Comments are closed.