நல்லாசிரியர் விருது

Film awards, Music awards போன்றவற்றை மட்டுமே பார்த்து வந்த எனக்கு இன்று பிபிஸி தொலைக்காட்சியில் பார்த்த Teaching awards ஒரு புதிய அனுபவம்.

பரிசு பெற்ற ஆசிரிய/அசிரியைகளை பற்றி அவர்களது மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் கேட்டு ஒளிபரப்பியது, பரிசுகளை வழங்க பிரபல பாடகர்கள், நடிகர்கள், தொலக்காட்சி பிரபலங்கள் வந்திருந்தது, என்று மொத்த நிகழ்சியுமே திரைப்பட விருது விழாக்களை மிஞ்சி விடும் வகையில் அமைந்திருந்தது சந்தோசமாயிருந்தது.

விருது பெற்ற ஒரு ஆசிரியர்
விருது பெற்ற ஒரு ஆசிரியர்

ஒரே வித்தியாசம் விருது வாங்கியவர்கள் யாரும் போலியான உணர்ச்சிகளை காட்டாமல், உண்மையாய் பேசியது. சிலரது கண்களில் கண்ணீர் துளிர்த்ததையும் காண முடிந்தது. அனைவரிடமும் நியாமாமன பெருமிதம் இருந்தது. நமது ஊரில் நல்லாசிரியர் விருது என்று வழங்குகிறார்கள். அவர்களிடம் படித்த மாணாக்கர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களது முகங்கள் இல்லை பெயர்கள் கூட தெரிவதில்லை. சமுதாயத்தின் மிக முக்கியமான பொறுப்பை ஏற்று சேவை செய்து வரும் ஆசிரிய/ஆசிரியைகளை நம்ம ஊரிலும் இது போல் ஒரு நாளாவது தொலைக்காட்சிகள் சிறப்பு செய்தால் நன்றாயிருக்குமே என்ற ஆசை மனதில் எழுந்ததை அடக்க முடியவில்லை.

]]>