Microsoft GDI vulnerability

‘தேங்காய்ல பாம் வைப்பாளோ’ன்னு உதயகீதம் படத்தில ஒரு காமெடி வருமே. அது மாதிரி யாருமே எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு ஓட்டை மூலம், JPEG கோப்புகள் வழியாக வைரஸ்கள் பரவுவதற்கு வழிவகை கிடைத்துள்ளது. JPEG (JPG) என்பது படங்களை சேமித்து வைக்க அதிகளவில் உபயோகப்படுத்தப் படும் ஒரு கோப்பு முறை.

இதனால் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சில மென்பொருட்கள்

விண்டோஸ் XP SP1
Internet Explorer SP1
Office XP/2000/2003

JPEG கோப்புகள் மூலம் வைரஸ்கள் பரவுவதற்கும் பிறத்தியார் உங்கள் கணினியை தாக்குவதற்கு வழியிருப்பதை கண்டுபிடித்த உடன் மைக்ரோஸாஃப்ட் உடனடியாக ஒரு security patch வெளியிட்டுள்ளது.

‘Executable filesல வைரஸ் வரும், MS Office filesல வைரஸ் வரும், பூட் செக்டர்ல வைரஸ் வரும், PIF filesல வைரஸ் வரும் JPEG படங்கள்ல வைரஸ் வருமோ?’ன்னு ஆச்சரியப்படாதீங்க. வந்துட்டே இருக்கு. அதுக்கு முன்னாடி, உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என்று http://www.microsoft.com/technet/security/bulletin/ms04-028.mspx என்ற தளத்திற்கோ அல்லது http://www.windowsupdate.com என்ற தளத்திற்கோ சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

]]>

2 thoughts on “Microsoft GDI vulnerability

  1. அடப்போங்க நவன்…
    ‘தேங்காய்ல பாம் வைப்பாளோ’ன்னு சொல்லி அலுவலகத்துல கத்தி சிரிக்கவச்சுட்டீங்க. இங்க சிட்டிபேங்க்ல ஒருசில வாரங்களுக்குமுன் ஃபிக்ஸ் போடணும்னு படுத்தி எடுத்தாங்க.

  2. அன்பு: இது கொஞ்சம் சீரியஸான விசயம் தான். கண்டிப்பாக எல்லோருமே அப்டேட் செய்துக்கத் தான் வேண்டும்.

    //’தேங்காய்ல பாம் வைப்பாளோ’ன்னு சொல்லி அலுவலகத்துல கத்தி சிரிக்கவச்சுட்டீங்க.//

    அது என்னமோ தெரியலை இந்த நியூஸை கேட்டவுடனே ‘கவுண்டரோட’ அந்த காமெடி தான் நியாபகம் வந்துச்சு. ஒரே வித்தியாசம் – இது புரளி இல்லை.

Comments are closed.