கனவு கலைந்தது?

ஆறாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. ஆனாலும் இது அவர் பெருமை பட கூடிய வகையில் அமைந்தது என்றே சொல்லலாம். இன்றைய போட்டியில் 6.83 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். பாராட்டுகள் அஞ்சு. இவரது இந்த சாதனை இந்திய தடகளத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்பலாம். இன்றைய விளையாட்டில் இன்னுமொரு ஆச்சரியமான செய்தி இந்திய பெண்கள் அணி 4 x 400 மீட்டர் ரீலே ரேஸில் (தொடர் ஓட்டம்?) இறுதி பந்தயத்திற்கு தகுதி பெற்றது. இன்று பி.பி.ஸி.யில் இந்தியா தகுதி பெற்ற இந்த பந்தயத்தை பார்க்கும் போது இறுதி அறிவிப்பு வரும் வரை இந்தியா தகுதி பெற்றதை நான் நம்பவில்லை. இன்று நான் பார்த்த விளையாட்டுகளில் என்னை கவர்ந்தவர்கள் இரண்டு சீனர்கள்

  • ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற க்ஸியாங் லியூ (Xiang LIU). இவர் இன்று ஒலிம்பிக்ஸ் சாதனையான 12.91 நிமிடங்களை சமன் செய்தார்.
  • பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற க்ஸிங் ஹுய்னா (Xing Huina).
அமெரிக்காவுடன் அனைத்து துறைகளிலும் போட்டியிட துடிக்கும் சீனாவிற்கு பாராட்டுகள். சீனாவின் சாதனைகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக தோன்றுகிறது. ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பார்ஸ் நிறுவனம் ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன் செய்த ஒரு ஆராய்ச்சியின் முடிவின் ஒலிம்பிக்ஸில் ஒரு தேசம் வெற்றி சதவிகிதம் முன்னேறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
  • மக்கள் தொகை
  • நாட்டின் GDP
இந்தியாவின் மக்கள் தொகை பற்றி சொல்ல தேவையில்லை. அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியா சோபிக்கும் வாய்ப்பு GDPயினால் மாறுமா? எனக்கென்னவோ கிரிக்கெட்டின் மீதான மோகம் குறைந்தாலே பிற விளையாட்டுகளில் செலுத்தும் கவணம் அதிகமாகுமென்று தோன்றுகிறது.]]>

2 thoughts on “கனவு கலைந்தது?

  1. //கிரிக்கெட்டின் மீதான மோகம் குறைந்தாலே பிற விளையாட்டுகளில் செலுத்தும் கவணம் அதிகமாகுமென்று தோன்றுகிறது//

    இதுவும் ஒரு காரணம். மாணவர்களுக்கு படிப்பு, நுழைவுத்தேர்வு, வேலைதேடல் என்ற நெருக்குதல்கள் இன்னொரு காரணம்.

  2. நீங்கள் சொல்வது உண்மை தான், காசி. ஆனால் விளையாட்டை தங்கள் துறையாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களும் கிரிக்கெட்டை தான் தங்கள் முதல் தேர்வாக வைத்திருக்கிறார்கள்.

    வசதி வாய்ப்புள்ள பெற்றோர்களும் (கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணத்தினால்) , காசு செலவழித்து தங்களது பிள்ளைகளை கிரிக்கெட் பயிற்சி மையங்களுக்கு அனுப்புத் தயராகவே இருக்கின்றனர். பிற விளையாட்டுகளில் (டென்னிஸ் தவிர்த்து) இந்த நிலை இல்லையே.

Comments are closed.