யாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. "அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே!" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு. யாஹூவில் ரிஜிஸ்டர் செயது பின்னர் உபயோகிக்காமல் அநாதையாக விடபட்ட 50 மில்லியன் பயனாளர் பெயர்களை (user names) புதிதாக கணக்கு தொடங்க உள்ளவர்களுக்கு கிடைக்கும் வகை செய்யபோகிறார்களாம். அதனால் சொந்த பெயரில் கணக்கு தொடங்க முடியாமல் 123askutasf@yahoo….. போன்ற ஈ மெயில் முகவரிகளை உபயோகித்து வருபவர்கள் மறுபடியும் ஒரு முறை புதிய கணக்கு தொடங்க முயற்சிக்கலாம். யாருக்கு தெரியும். உங்கள் பெயரை முடக்கி வைத்திருந்த ராமசாமியும், கந்தசாமியும் உங்களுக்காக அதை விட்டு கொடுத்திருக்கிலாம். இந்த செய்தி உண்மையா வெறும் புரளியா என்று எனக்கு தெரியாது. ஏதோ என் காதில் விழுந்த விஷயத்தை உங்க காதிலேயும் போட்டுட்டேன். ]]>
உண்மை தான் நானும் அவசர அவசரமக என் பேயரை யகூ’வில் தொடிப்பார்த்தேன்!!! ஏமாற்றம் தான்!!!
http://profiles.yahoo.com/r…
1996 இல் என் பேயரை யாரோ register பண்ணிவிட்டார்கள், பாவிப்பதாகத் தெரியவில்லை…