Thamiraparani Thendral

சாகரன்
“தேன்கூடு சாகரன் அவர்களுக்கு அஞ்சலி”ன்னு ஒரு அறிவிப்பு. முதல்ல சாகரனுக்கு நன்றின்னு தப்பா வாசித்து பதிவை திறந்ததற்கு அப்புறம் தான் அதிர்ச்சி உரைத்தது.

வலைப்பதிவுலகில் நான் சம்பாதித்த நட்புகளில் முதன்மையானவர் கல்யாண். சமீப காலமாக அவருடன் அதிக தொடர்பு இல்லை என்ற போதும்..

கடைசியாக தொடர்பு கொண்டது அவர் தேண்கூடு தளத்தினை உருவாக்கி கொண்டிருந்த போது. என்னோட Website பார்த்துக் கொண்டிருந்த போது புது referer தெரியவே … என்ன தளம் என்று தொடர்ந்து சென்று பார்த்ததில் இவர் இந்த தளத்தை உருவாக்கி வருநது தெரிந்தது. ஆஹா நண்பர் இப்படி ஒரு வேலை செய்துட்டிருக்காரான்னு சும்மா வம்பு செய்யலாம்னு ஒரு membership ID உருவாக்கிட்டு வந்துட்டேன். அப்போது அந்த தளம் பற்றிய அறிவிப்பு ஏதும் வந்திருக்கவில்லை.

அடுத்த நாள் ரொம்ப சந்தோசமா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Dec 7, 2005 4:49 PM

அன்பு நவன்,

வணக்கம், நலம். நீங்க எப்படி இருக்கீங்க.

என்ன, கல்யாணம்லாம் ஆயிடுச்சா?!

ஒரு சிஸ்டம் ஒண்ணு டெவலப் பண்ணிகிட்டிருக்கிறேன். தேன்கூடு.காம் அப்படின்னு,

தமிழ் வலைப்பதிவுகளை வகைப்பிரிக்கும் ஒரு வலைப்பதிவுகள் வாசல்(போர்டல்) மாதிரி.

தமிழ்மணத்துக்கு போட்டியா இல்ல.. ஆனா, ஒரே ஒரு வலைப்பதிவுகள் திரட்டி தமிழ்ல இருக்கறது சரியில்லைனு தோணுது.

உங்க ஐடி-யை இன்னிக்கு மெம்பர்லிஸ்டில் பார்த்தேனா, சந்தோசமாயிடுச்சு.

சைட் எப்படி வந்திருக்கு? நல்லாருக்கா?

உங்க கருத்துக்களை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.

எனக்கு மறக்காம மெயில் அனுப்புங்க.

அன்புடன்,

சாகரன்.

அதன் பின்பு ஓரிரு முறை அவருடன் email தொடர்பு கொண்டது தான். கடந்த 18 மாதங்களில் எனது வாழ்க்கை மாறிப்போனது… சாகரனுடனான தொடர்பும் அறுந்து போனது. அப்பப்பம் தேன்கூடு தளத்தை பார்த்திருக்கேன். Good jobன்னு மனசுக்குள்ளேயே பாராட்டிருக்கேன். இடைபட்ட இந்த காலத்தில் தேன்கூடு மூலமாக அவர் செய்திருக்கும் சாதனைகளின் வீச்சு இப்பம் தான் புரியுது. வலைப்பதிவர்கள் சாகரனை பத்தி எழுதும் போது.. அவரை பற்றிய மதிப்பு இன்னும் கூடுது.

கூடவே எனது வாழ்க்கையில் நான் என்ன சாதித்து விட்டேன் என்ற கேள்வியும் வருது…

அப்துல் கலாமின் இந்த வரிகள் ஏனோ இன்னும் அர்த்தம் வாய்ந்ததாக தோன்றுகிறது…

காலத்தின் மணல் பரப்பில்

உன் காலடிச் சுவடுகளைப்

பதிக்க விரும்பினால்

உனது கால்களை

இழுத்து இழுத்து நடக்காதே!

இது வரைக்கும் நேரில் பார்க்காதவரை இன்று தான் புகைப்படமாக மத்த பதிவுகளில் பார்த்தேன்.

நண்பர் ஒருவரை இழந்த இழப்பு. மனது வலிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு யார் எந்த வகையில் ஆறுதல் சொல்ல முடியும்? அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது தான் இப்போதைக்கு தேவையான விசயம்னு தோனுது.

சாகரன் தொடங்கிய பணிகளை தொடர்வதற்கு என்னாலான உதவிகள் எதுவானாலும் செய்ய காத்திருக்கிறேன். தேன்கூடோ அல்லது அவரது மற்ற திட்டங்களோ தொடர்வதற்கு என்ன தேவைன்னு யாராவது சொல்ல முடியுமா ப்ளீஸ்…

Improved Tamil language support in Mozilla
மொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/

இன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.

This seems to work with a few minor glitches. Will write a final report after some intensive testing.

அமைதியான ..
என்றாவது ஒரு நாள் யாராவது கேட்பதற்கு முன்பாக சொல்லி விடுவது நல்லது. நான் தமிழ்மணம் திரட்டியிலிருந்து எனது பதிவுகளை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டு விலகியுள்ளேன்.

இதற்கான காரணம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை . சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ்மணம் வந்ததிலிருந்து வலைப்பதிவுகளுக்கு வாசகர் வட்டம் கூடியுள்ளது. ஆனால் வலைப்பதிவுகளுக்கான அடிப்படை தன்மைகளை பல வலைப்பதிவுகள் இழக்கத் தொடங்கியுள்ளன . Tamil blogs have now started to look like a forum. One big Tamizmanam forum.

கொஞ்ச நாட்கள் சந்தடியிலிருந்து விலகியிருக்கலாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்து விலகியுள்ளேன். வலைப்பதிவுகள் மற்றும் தாங்கள் உபயோகிக்கும் சேவைகள் பற்றிய புரிந்துணர்வு கூடிய விரைவில் பயனர்களுக்கு வரும் என்று நம்புகிறேன்.

இன்னமும் தமிழ்மணம் RSS feedஐ எனது திரட்டிகளிலிருந்து தூக்கிவிட கை பரபரக்கிறது, தினசரி செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம் மிச்சமாகும். அதற்கு முன் நான் இரசிக்கும் சிலரின் எழுத்துக்களை படிப்பதற்காக எனக்கான ஒரு OPML உருவாக்க வேண்டும்.

நம்ம மக்களுக்கு பரபரப்பா ஏதாவது ஒன்னு இருந்து கிட்டே இருக்கு. இப்போதைக்கு காசியும் தமிழ்மணமும் எல்லார் வாயிலும் அவலாகிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த சந்தடியில் நானும் மூழ்கியிருந்தால் வாழ்க்கையின் கால்வாசி நேரத்தை இந்த பரபரப்புகளை பார்வையிடுவதிலேயே முடிந்து விடும். கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்து இந்த திரும்பி இந்த பக்கம் திரும்பி பார்த்தால் காசி செஞ்சது ‘சரிXதப்பு’ன்னு ஒவ்வொருத்தரும் விடுற அறிக்கையை ஓடி ஒடி படிக்கதுலேயே இரண்டு மூனு நாளா முழு நேரமும் போயிடுச்சு. தமிழ்மணம் சேவையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்டுப்பாடுகள் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல ஒவ்வொருததரும் விடுற அறிக்கையை படிச்சு என் BP ஏறாம இருக்க நானாவே இதை விட்டு ஒதுங்கிக்கிடுறது நல்லது இல்லை .

குடி பெயர்தல்
“ஐரோப்பாவிலிருந்து குடி பெயர்ந்து இங்கே வருபவர்கள் பரவாயில்லை. கலாசாரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாதிருப்பதால் அவர்கள் இங்குள்ள சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வருபர்கள் தான் பெரிய பிரச்சனை.”

காலையில் அலுவலகத்துக்கு கிளம்புகையில் பிபிஸியில் அந்த பெண்மனி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஏதோ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என்று அவர் பெயர் போட்டு கீழே எழுதியிருந்து. பெயரும் பத்திரிக்கையும் நினைவு இல்லை. கூட ஒரு கறுப்பர் இன நடுத்தர வயது ஆண். முதலில் இருந்து பார்க்காததால் அவரும் யார் என்று தெரியவில்லை.

அவர் ‘அப்படியெல்லாம் இல்லை. இங்கு புலம் பெயர்ந்து வரும் அனைவரும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி தான்’ என்று மறுக்க, ‘இல்லை எனக்கு தெரிந்து ஆப்பிர்க்காவில், ஆசியாவில் இருந்து வரும் பல குடும்பத்தில் இருந்து வரும் பலர் இன்னமும் தங்கள் பழக்க வழக்கத்தை விடாமல் தொடர்ந்து கடை பிடித்து வருவதால் அவர்களால இந்த சமூகத்துடன் ஒன்றிணைய முடியவில்லை’ என்று விடாது அடம் பிடித்தார் அந்த பெண்.

அவரது பார்வையில்

புலம் பெயர்ந்து வருபவர்களின் கலாசாரத்தில் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாது.

பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை விட இந்தியர்கள் விரைவாக மாறிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளாலும் அதிகமாக சம்பாதிக்க முடிகிறது. அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ முடிகிறது.

இன்னும் சில காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார். அவர் பேசியதில் சில விசயங்கள் இனவெறியாளரின் பேச்சு போன்று தோன்றவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த கறுப்பர் அழகா இரண்டு கேள்வி கேட்டார்.

இங்கு வருபவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டு உங்களுக்கு தகுந்தார் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்தும் சில இனத்தவர் தங்கள் பழக்கவழக்கங்களை விடாது பிடிவாதமாய் கடைபிடித்து இங்குள்ளவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தும் ஆங்கிலேயர்கள் ஏன் ஆப்பிரிக்க பழக்கவழக்கங்களுக்கு மாறாமல் தங்கள் பழக்க வழக்கங்களை இன்னமும் கடை பிடிக்கின்றார்கள்?

இந்தியர்கள் சமூகத்துக்கு அதிக பங்களிப்பதாக சொல்கிறீர்கள். இந்தியர்கள் என்றால் குஜராத்தியா? பஞ்சாபியா? மதராஸியா? எவரை சொல்கிறீர்கள்?

இதற்குள் செய்தியறிக்கைக்கு நேரமாகிவிட்டது என்று தொகுப்பாளர் இடை புகுந்து இவர்களின் பேச்சினை முடித்துக் கொண்டார்.

இந்த விவாதத்துக்கு காரணம் என்ன என்று பின்னர் தான் தெரிந்தது.

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மக்கட்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர்கள்.

இலண்டனில் இப்போது வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர்.

சமன்பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங்கள் இங்குள்ளவர்களுக்கு கவலை அளிப்பது தெரிகிறது. அதிலும் சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்த கவலை வலுப்பட்டிருக்கிறது.

கடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் வரும் பல செய்திகளும், அறிக்கைகளும், நிகழ்சிகளும் சில sensitiveஆன விசயங்களை நாசூக்காக தொட்டும் தொடாமலும் பேசி வருகிறது. இது வரைக்கும் தொலைக்காட்சிகளின் செயல்பாட்டினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதுவரைக்கும் mainstream media பேசாமல் இருந்த பல விடயங்கள் இப்போது அலசத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாம் மதம் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்த தொலக்காட்சி நிகழ்சிகளும் இதில் அடக்கம்.

என்னன்னு சொல்றது?
தத்தெடுத்து இரண்டு வாரத்தில்..????

Sim Cityயும் Simputerஉம்
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.

லினக்ஸ் அடிப்படையில் அமைந்த குறைந்த விலை கணினி என்பதால் சமூகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கணினியையும், இணையத்தையும் எடுத்த செல்ல இது உதவும் என்று நம்பப்பட்டது. E-governence, ‘bridging the digital divide’ என்று சிம்புயூட்டர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. வந்த சில நாட்களில் பெரும்பாலானோர் இதனை ஒரு ‘glorified technology’ என்ற மறந்த விட - சிம்புயூட்டர் ஆர்வலர்கள் இன்னமும் இந்த தொழில் நுட்பத்தை சிறப்பாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

குறைந்த பட்சம் பெங்களூர் போக்குவரத்து காவல்துறையின் அன்றான வேலைகளை எளிதாக்க சிம்புயூட்டர் பெரிதும் உதவி வருகிறது. டெல்லி காவல்துறையும் விரைவிலேயே சிம்புயூட்டரை அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிகிறது.

லைசன்ஸ் எடுக்காதவர்கள் எல்லாம் உடனடியாக லைசன்ஸ் எடுத்துவிடுவது நல்லது. லைசன்ஸே இல்லாமல் ‘வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்து விட்டேன்’ என்று நல்ல பிள்ளை மாதிரி ட்ராமா போடுவது இனிமேல் காவலர்களிடம் எடுபடாது.

“In one case, we fined a van driver for 10 previous violations,” Bangalore police commissioner, Ajai Kumar Singh, told the BBC.

தொடர்புடைய சுட்டிகள்:

*  Woe for traffic offenders in Sim city - BBC

* Bangalore cops flip for India’s answer to palmtops

07 ஜூலை 2005 - சில குறிப்புகள்
இந்த உலகிற்கு பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.

1. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு இலண்டனை நேற்று தேர்ந்தெடுத்திருப்பது. இந்த வெற்றியிற்கான கொண்டாட்டங்கள் இன்னமும் முழுதாக துவங்கவில்லை. அடுத்த ஏழு வருடங்களில் இலண்டன் நகரம் காணவிருக்கும் மாற்றங்கள், அடையவிருக்கும் முன்னேற்றங்கள் என்று பிரித்தானியர்கள் கணவு கொண்டிருக்கும் போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கின்றன.

2. ஸ்காட்லாண்டில் இன்று காலை துவங்கிய G8 மாநாடு. உலகில் சக்தி வாய்ந்த (என்று சொல்லிக் கொள்ளும்) எட்டு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா, சீனா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஐக்கிய ராஜாங்கத்தில் நடக்கும் இந்த சூழ்நிலையில், நாட்டின் தலைநகரில் தாக்குதல்கள் நடத்தியிருப்பதன் மூலம் பயங்கரவாதம் உலகின் எந்த மூலையும் தனது எல்லையை தாண்டியதில்லை என்று நிரூபித்திருக்கிறது.

இலண்டன் நகரம், நாட்டின் அரசாங்கம், மாநகர காவல் துறை - இவர்களுக்கெல்லாம் இன்றைய நிகழ்வு பல காலமாக எதிர்பார்த்து வந்த ஒன்று தான்.

கடந்த வருடம் மார்ச்சு மாதம் இலண்டன் மேயர் கென் லிவிங்க்ஸ்டன், மாநகர காவல் தலைவருடன் இணைந்து அறிவித்த பத்திரிக்கை செய்தியின் சாராம்சம் இது தான். - “நகரம் தாக்கப்படுமா இல்லையா என்பதில்லை கேள்வி. கட்டாயமாக நாம் தாக்குதலுக்குள்ளாகும் ஆபத்தில் இருக்கிறோம். ஆனால் எங்கே எப்போது என்பது தான் இங்கேயுள்ள கேள்வி. ”

இதோடு கூட கடந்த வருடம் மத்திய இலண்டனின் ‘Bank’ பாதாள தொடர்வண்டி நிலையத்தில் தாக்குதல் சமயத்தில் எப்படி செயல்படுவதை என்று ஒரு சோதனையும் நடத்தி பார்த்தனர்.  அந்த சோதனையின் முடிவில் கண்டறிந்த பல ஓட்டைகள் இன்று உதவிக்கு வந்திருக்கிறது.

நகரின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்த நேரத்திலும் அமைதியாகவும் திறமையாகவும் நெருக்கடியினை கையாண்டிருக்கிறார்கள். இதற்காக காவல்துறையும் (Scotland Yard @ Metropolitan Police), தீயனைப்புத்துறையும், மருத்தவ குழுக்களும் நிச்சயமாக மக்களின் பாரட்டினை பெற தகுதி பெறுகிறார்கள்.

வெடித்திருக்கும் குண்டுகள் அனைத்தும் conventional bombs தான். இதே இடத்தில் Biological அல்லது chemical முறையில் தாக்குதல் நடந்திருந்தால் அதனால் என்ன நேர்ந்திருக்கும் என்பதனை நினைத்து பார்க்கவே முடியவில்லை.

பொது மக்களும் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது இன்றைக்கு நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் வைத்திருக்க உதவியிருக்கிது.

என்னளவில் கடந்த ஒரு வருடமாக நான் பாதாள ரயில் பக்கம் வார நாட்களில் போவதில்லை. ஆனால் அதற்கு முன்னால் - ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு பாதாள ரயில் நிலையத்தில் ஒரு தடத்தில் இருந்து அடுத்த தடத்திற்கு மாறும் போதோ திடீரென்று “பாதுகாப்பு எச்சரிக்கை. அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள்” என்று அறிவிப்பு வரும். வெளியே வந்தால் பாதாள ரயில் நிலையத்தை பூட்டி விடுவார்கள். மாற்றாக பேரூந்தில் செல்வதாயிருந்தால் 2-3 மணி நேரம் கூடுதலாக ஆகும். ஓரிரு முறை இப்படி கூட்டத்தில் தொலைந்து போய் அதன் பின் பாதுகாப்பு எச்சரிக்கை என்று வெளியேற்றினால காலை நேரத்தில் ஏதாவது கஃபேக்கும், மாலை நேரமானால் பக்கத்தில் தென்படும் பப்’பிற்கும் போய் 30 நிமிடங்கள் செலவழித்து விட்டு மீண்டும் வந்தால் அதற்குள் மீண்டும் ரயில்கள் ஓடத் துவங்கியிருக்கும்.

இது போன்ற அனுபவங்களை பல முறை சந்திருப்பதனால் மக்கள் பீதியடைந்து ஒருவரை வரை முண்டிக்கொண்டு செல்லாமால் அமைதியாக வெளியேறுவது பழகிவிட்டது.

எனது நண்பர்கள் அனைவரும் இலண்டன் தாக்குதலுக்குள்ளாகும் எனறு நம்பிய/பயந்த போதும் நான் அதனை நம்பவில்லை.

காரணம் உலகில் உள்ள எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் இலண்டனில் ஏதோ ஒரு தொடர்பு இருந்து வந்திருக்கிறது/இருக்கிறது. பல பயங்கரவாத செயல்களுக்கு இங்கேயிருக்கும் சில குழுக்களிடமிருந்து நிதியுதவியோ, தாக்குதலுக்கான திட்டமிடலோ, அல்லது பயிற்சியோ கிடைத்து வந்திருக்கிறது. மற்ற நாடுகளில் குரல் கொடுத்தாலும் இங்கே இருக்கும் பயங்கரவாத குழுக்களை - அவர்கள் வெளிநாடுகள் மட்டும் செயல்படும் வரையில் பிரிட்டன் பெரிதாக கண்டுக் கொண்டதில்லை. இப்படியிருக்க இங்கேயே எந்தவிதமான பயங்கரவாத செயலினையும் செய்து தங்களை பலவீனபடுத்திக்கொள்ள மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன்.

இன்றைய தாக்குதல் இந்த சமன்பாடினை மாற்றியெழுதியிருக்கிறது.

இதனை எவர் எக்காரணத்திற்காக செய்திருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

“ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் இன்றைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்.” என்று சொல்வதினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அல்-கொய்தா, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அதற்குள்ளாக முடிவுக்கு வருவதும் தவறு. அனைத்து ஊடகங்களும், தலைவர்களும் அதற்குள்ளாகவே இந்த முடிவிற்கு வந்திருப்பதாக தோன்றுகிறது.

அமெரிக்கர்கள் புஷ்சினை இரண்டாவது முறை தேர்ந்தெடுப்பதற்கும், இங்கிலாந்தில் ப்ளேர் இந்த முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கும் பல வேற்றுமைகள் உண்டு.  இரண்டையும் ஒப்பிட முடியாது.

இது தொடர்பாக மேலும் பல விசயங்களை பற்றி எழுதவேண்டும்.

இப்போதைக்கு இஸ்லாமிய தீவிரவாதம், அல்-கொய்தா, பண்டைய வரலாறு, சமீபத்திய ஈராக்/அஃப்கானிஸ்தான் போர் என்பதையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ள எனக்கு தோன்றவில்லை.

ஆனால் படுக்கைக்கு செல்லும் முன் இதனை எழுதிக்கொண்டிருக்கையில் குழப்பம் மட்டுமே மனதில் நிறைந்திருக்கிறது.

Explosions on London Underground
காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எந்த செய்தியும் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இது பற்றிய செய்தி கிடைத்தது. இது வரை நடந்திருப்பதா விபத்தா? இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.

Several hurt in ‘Tube explosion’

At this moment no one knows what is really going on. It looks like London’s underground network is completely closed. There are news of multiple blast in London Underground, people injured in Liverpool Street station, and explosions in three buses.

- Telegraph - Walking wounded after blast Underground

- Financial Express - Explosions cause caos

Updates:

- British Transport Police said the incident, reported at at 8.49am on the Metropolitan Line between Liverpool Street and Aldgate, was thought to have been caused by a collision between two trains, a power cut or a power cable exploding.

- Union: ‘Explosive device’ on Tube

- 20 deaths have been confirmed - says LBC radio.

Update: 11:20

Listening to BBC radio… The Police has a very short but clear message for the people in London.

- Please stay whereever you are. The whole of London Transport is in stand still at the moment.

- Do not call emergency unless if it is an emergency situation.

Yahoo! 360° and some important Security Tips
இப்பொழுது தான் பார்த்தேன். யாஹூ 360 உபயோகிக்க விரும்புவோர் இனியும் பிறரின் அழைப்புக்காக காத்திருக்க தேவையில்லை. சோதிக்க/உபயோகிக்க விரும்புவோருக்கான சுட்டி இதோ: Yahoo! 360° - Home

—-o0o——–o0o——–o0o——–o0o—-

உங்கள் வலைப்பதிவுகளை நிறுத்தி வைப்போம் என்று சிலர் குறும்பாக சொல்லி வைக்க அதனை வாசித்த பலரும் ஆடிப்போயிருப்பதாக தெரிகிறது.  தன் “Hard Disk Drive”ஐ அழிச்சுத் தொலைச்ச hackerஐ பற்றி இரு மாதங்களுக்கு முன்பு படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

ஜெர்மன் தெரிந்தவர்களுக்கு

ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு

அதற்காக இணைய தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் இருங்கள் என்று நான் சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு பயப்படாமல் இருந்து விட்டால் அதனால் விளையும் பின் வளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாதலாததால், உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வழிமுறையும் சொல்லி விடுகிறேன்.

இந்த வழிமுறையினை பின் பற்றுவதால் இணைய தீவிரவாதிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், Ad-ware, Spyware, Virus, Identity theft போன்ற பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதற்காக உங்கள் மேலதிகாரி எனக்கு நன்றி செலுத்தவும் கூடும் - அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க போவதால்.

உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த தீயரண் (Firewall) எல்லாம் தேவைப்படாது. இணைய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு சுலபமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு உங்களுக்கு அதிகம் செலவாகாது. அதே நேரத்தில் அகலப்பாட்டை, ராஜாபாட்டை என்று நீங்கள் எந்த வகையான இணைப்பு வைத்திருந்தாலும் இது வேலை செய்யும்.

இது பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் செயல் விளக்கம் இங்கே.

பி.கு: இணையத்தில் உள்ள பிற தொழில் நுட்பங்களை போன்று இதுவும் சிலரால் தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

தொடர் ஓட்டம் :: Book Meme
வெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய்! இது உமக்கே நியாயமா படுதா…வே? என்னவோ நல்லாயிருவே… நல்லாயிரு.

எனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக்கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.

ஏற்கெனவே ரொம்ப பேர் சொன்னது போல் எனது வாசிப்பு அனுபவமும் காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலிமாமா, ரத்னபாலா அப்புறம் ‘தினமலர்’ சிறுவர் மலர் இப்படித் தான் தொடக்கம்.

வீட்டில அம்மா, அப்பா, மாமா, சித்தி இவங்க எல்லாம் சின்ன வயசில வாங்கின பரிசு புத்தகங்கள் நிறைய இருந்தது. பெரும்பாலும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட எளிமையான புத்தகங்கள். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங்க், நேரு, வல்லபாய் பட்டேல் இப்படி நிறைய பேரின் வாழ்க்கை வரலாறு இது மாதிரி சின்ன சின்ன புத்தகங்களில் இருந்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

எங்க வீட்டுல ஒரு நல்ல பழக்கம் பெரும்பாலும் பரிசு கொடுப்பது புத்தகங்களாக தான் இருக்கும். அது தவிர அப்போது நிறைய ரஷ்ய புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளி வரும். வீட்டில ஒரு பெரிய ரஷ்ய புத்தக கலெக்ஷ்னே வைச்சிருந்தேன். “சோவியத் யூனியன்” என்று ஒரு பத்திரிக்கை வரும். இந்த பத்திரிக்கையின் ஆங்கில/தமிழ் பதிப்பு இரண்டுமே ரொம்ப நாளாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இப்போது பெயர் சரியாக நினைவில் (Misha என்று நினைக்கிறேன்) இல்லாத ஒரு (சோவியத்) சிறுவர் பத்திரிக்கையும் இருந்து ரொம்ப நாளாக வீட்டுக்கு வந்தது.

காமிக்ஸ் புக் எல்லாம் போர் அடித்த ஒரு நாளில் வீட்டில் இருந்த பெரிய புத்தகங்களின் மீது கண் பட பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுக்க தொடங்கினேன். பழைய “ஆனந்த விகடன்” இதழ்களை பைன்ட் செய்து வைத்திருந்ததை படித்து முடித்ததும் நான் படித்து முடித்த முதல் பெரிய புத்தகம் “ராவ்பகதூர் சிங்காரம்” - முழு நாவல் (எழுதியவர் யாரென்று தெரியவில்லை). ஒரு கோடை விடுமுறையின் போது இரண்டு வாரங்களில் படித்து முடித்தேன் என்று நினைக்கிறேன். அப்புறம் படித்த வேறு சில நாவல்களின் பெயர்கள் இப்போது நியாபகம் இல்லை. ஆங்… அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. அந்த நாட்களில் படித்த இன்னொரு புத்தகம் “சத்திய சோதனை“.

இதெல்லாம் நான் 8ஆம் வகுப்பு முடிக்குமுன் நடந்தவை. வீட்டிலிருந்த சின்ன லைப்ரரியினை காலி செய்ததும் பொது நூலகத்துக்கு போய் வாசிக்கும் பழக்கத்தை ஏனோ தொடராமல் விட்டு விட்டேன். அந்த வெற்றிடத்தை நிரப்ப பக்கத்து வீட்டு அண்ணன்மாரிடமிருந்து ராஜேஷ்குமார் கிடைத்தது. இடையில் 10, 12 தேர்வுகளுக்கு தயார் செய்கிறேன் பேர்வழி என்று பாட புத்தகங்கள் தவிர பிற புத்தங்களின் வாசம் மொத்தமாக மறந்து போனது.

கல்லூரி நாட்களில் அதிகம் படித்த/பிடித்த இரண்டு எழுத்தாளர்கள் பாலகுமாரன் மற்றும் சுஜாதா.

ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை விரும்பி வாசிப்பதற்காக பதிலாக பிறரிடம் நானும்் இதனை வாசித்து விட்டேன் என்று சொல்வதற்காகவே சில புத்தகங்களை வாசித்தது உண்டு.

எல்லாரும் காப்மேயர் போன்று சய முன்னேற்ற புத்தகங்களை படிக்கையில் எனக்கென்னவோ அது போன்ற புத்தகங்களில் சுத்தமாக  ஈடுபாடு இருந்தது கிடையாது. நண்பன் எவனாவது வந்து இதை படி. ‘ரொம்ப நல்ல புக்’னு சொன்னாலும் ‘நான் தெளிவு பெற இது மாதிரி புத்தகங்கள் தேவையில்லை. நான் யாருன்னு எனக்கு தெரியும். என் திறமைகளை தெரிஞ்சுக்கிறதுக்கு இந்த மாதிரி புக் படிக்க தேவையில்லை’ன்னு பதில் சொல்லியிருக்கேன்.

ஆனா ரொம்ப நாள் கழித்து சில தோல்விகளால் மனம் மிகவும் குழப்பமடைந்திருந்த போது மன அமைதியும், நம்பிக்கையும் ஒரு புத்தகத்தை வாசிக்கையில் கிடைத்தது. அந்த புத்தகம் “How to stop worrying and start living” - Dale Carnegie. அதுக்கப்புறம் நிறைய பேருக்கு அந்த புத்தகத்தை பரிசா வாங்கி கொடுத்திருக்கேன்.

இதைத் தாண்டி தீவிர இலக்கியம் பற்றி அறிந்ததும் இல்லை. அதற்கான முயற்சியும் எடுத்ததும் இல்லை.

நிற்க. அது என்னமோ தெரியலை. புத்தகங்களை பற்றி எழுத சொன்னால் இப்படி ஒரு சிறு வாழ்க்கை வரலாறு எழுத தோனுது. சரி இப்பம் விளையாட்டிற்கு வருவோம்.

நான் வாங்கிய புத்தகங்கள் 200-250 இருக்கும். அதில் தமிழ் 75 இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கே இப்போது ஒரு 50-60 இருக்கும்.

பிடித்த ஐந்து தமிழ் புத்தகங்கள்

- பயணிகள் கவணிக்கவும் - பாலகுமாரன்

- சிவகாமியின் சபதம் - கல்கி

- வந்தார்கள் வென்றார்கள் - மதன்

- ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

- கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

சமீபத்தில் படித்த புத்தகங்கள்

- என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்

- சிந்தையில் ஆயிரம் - ஜெயகாந்தன் (ஜெயகாந்தன் வலைப்பதிவு வைத்திருந்தால் இப்படித் தான் இருந்திருக்கும் என்று தோன்றியது்)

- India 2020 - APJ Abdul Kalam with Y S Rajan

- Hostage - Robert Crais

- On the street where you live - Mary Higgins Clark

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

- How Britain Made the Modern World  - Niall Ferguson

- A History of South India - K.A. Nilakanta Sastri

- 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் - மயிலை சீனி. வேங்கடசாமி

- Holy Cow! - Sarah Macdonald

- விஷ்னுபுரம் - ஜெயமோகன் (ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை. எப்படியும் ஒரு long weekendல படிச்சுடலாம்னு இருக்கேன்.)

சமீபத்தில் பரிசாக கிடைத்த புத்தகங்கள்்

- Roger’s Profanisaurus - Viz (The Ultimate Swearing Dictionary … ரொம்ப உதவியா இருக்குது  )

- (நண்பரின் தந்தை பரிசளித்த இரு பழைய புத்தகங்கள்)

- திருக்கோவையாருரை - ஆங்கீரச ஆண்டு (ரோமன் ஆண்டு என்னென்னு யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்)

- அகத்தியமுனிவர் திரட்டியருளிய தேவாரப்பதிகங்கள் - திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சுக்கில ஆண்டு (ரோமன் ஆண்டு?)

என்ன மாதிரியான புத்தகங்களை அதிகமாக படித்திருக்கிறேன் என்று யோசித்து பார்க்கையில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அந்தந்த நேரத்தைய தேடலை பொறுத்து நான் படிக்கும் புத்தகங்களும் மாறி வருகிறது.

சரி இப்பம் யாரை இந்த விளையாட்டுக்கு கூப்பிடலாம்? நான் அழைக்கும் ஐந்து பேர்…

- வாசன்

- அன்பு

- செல்வராஜ்

- ஷ்ரேயா

- பரி

அப்பாடி…! Relay raceல என் lap முடிஞ்சுது.